மன அழுத்தப் பிரச்சனையால் மேலும் ஒரு இளம்வீரர்ஆஸ்திரேலிய அணியிலிருந்து விலகல்..?

Pucovski

ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர அதிரடி ஆட்டக்காரரான கிளென் மேக்ஸ்வெல் சமீபத்தில் நடந்த இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாடினார். அவர் இரண்டு போட்டிகளில் விளையாடி இருந்த நிலையில் அந்த தொடரில் இருந்து திடீரென விலகினார். மேலும் மன அழுத்தம் காரணமாகத் தான் விலகுவதாகவும் அறிவித்தார்.

glenn-maxwell

மேக்ஸ்வெல் சில நாட்கள் ஓய்வு எடுத்துவிட்டு பின்னர் இந்த பிரச்சினைகளில் மீண்டும் அணிக்கு திரும்புவார் என்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து. அதனைத் தொடர்ந்து சமீபத்தில் ஓரிரண்டு நாட்களுக்கு முன்பு ஆஸ்திரேலியா ஏ மற்றும் பாகிஸ்தான் அணி விளையாடிவந்த நிக் மேட்டின்சன் மனா அழுத்தம் காரணமாக விலகுவதாக அறிவித்தார்.இந்நிலையில் தற்போது மேலும் ஒரு இளம் வீரர் மன அழுத்தம் காரணமாக அந்த அணியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். அதன்படி பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தற்போது ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இந்த தொடரில் ஆஸ்திரேலிய அணியில் இடம் பெற்றிருந்த வில் புகோவ்ஸ்கி என்ற இளம் வீரர் தனக்கு மன அழுத்தப் பிரச்சினை இருப்பதாக கூறி அணியில் இருந்து விலகியுள்ளார்.

Will Pucovski

இதனால் 2 வாரங்களுக்குள் அடுத்தடுத்து 3 வீரர்கள் தற்போது ஆஸ்திரேலிய அணியில் இருந்து வெளியேறியதால் அந்த அணியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அடுத்தடுத்து மூன்று வீரர்கள் பிரச்சினை காரணமாக கிரிக்கெட்டில் இருந்து தற்காலிகமாக வெளியேறியதால் ஆஸ்திரேலிய அணிக்கு என்ன ஆனது என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Leave A Comment

Your email address will not be published. Required fields are marked *