அரசியல், கிரிக்கெட்டில் எதுவும் நடக்கலாம்: கட்கரி

Image result for நிதின் கட்கரி

அரசியல், கிரிக்கெட்டில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என மஹாராஷ்டிர அரசியல் குறித்து மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.இதுகுறித்து நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி பேசியதாவது: மஹாராஷ்டிராவில் பா.ஜ., அல்லாத அரசு அமைந்தால், மும்பையில் நடக்கும் உள்கட்டமைப்பு திட்டங்கள் குறித்து கேள்வி கேட்கிறீர்கள். ஆட்சிகள் மாறலாம். ஆனால் திட்டங்கள் தொடரும் என்பதே எனது பதில். அதில் பிரச்னை எதுவும் வராது. பா.ஜ., காங்., தேசியவாத காங்., அல்லது எந்த கட்சிகள் ஆட்சிக்கு வந்தாலும், நேர்மையான கொள்கைகளை மத்திய அரசு ஆதரிக்கும்.

அரசியலிலும், கிரிக்கெட்டிலும் எது வேண்டுமானாலும் நடக்கலாம். போட்டியில் நீங்கள் தோற்பது போல் தோன்றும். ஆனால் முடிவுகள், திடீரென தலைகீழாக மாற வாய்ப்பு உள்ளது. டில்லியில் இருந்து இப்போதுதான் வந்திருக்கிறேன். எனவே மஹா.,வில் நடக்கும் தற்போதைய அரசியல் குறித்து எனக்கு தெரியாது. இவ்வாறு அவர் பேசினார்.

Leave A Comment

Your email address will not be published. Required fields are marked *