நீதிமன்ற உத்தரவில் குழப்பம்: முதல்வர் விஜயன்

Image result for முதல்வர் விஜயன்

சபரிமலை தொடர்பாக உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் சில சந்தேகங்களும், குழப்பங்களும் உள்ளதாகவும், சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார்.சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குள், அனைத்து வயது பெண்களும் அனுமதிக்கப்பட வேண்டும் என்ற உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுக்களை, ஏழு நீதிபதிகள் அடங்கிய அமர்வுக்கு மாற்றி, உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

இது தொடர்பாக நிருபர்களிடம் கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியதாவது: சபரிமலை தொடர்பான மறு சீராய்வு மனுவை 7 நீதிபதிகள் கொண்ட அமர்விற்கு மாற்றி உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் சில சந்தேகங்களும், குழப்பங்களும் உள்ளது. சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்திய பிறகே, அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும். தற்போதைய நிலையில், பழைய தீர்ப்பிற்கு தடை விதிக்கப்படவில்லை. பழைய தீர்ப்பை மாற்றி உத்தரவிடப்படவில்லை. அனைத்து வயது பெண்களையும், சபரிமலையில் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கலாம் என்ற தீர்ப்பு இன்னும் அமலில் தான் உள்ளது .தீர்ப்பு எதுவாக இருந்தாலும், அதை அமல்படுத்த அரசு தயாராக உள்ளது என்றார்.

Leave A Comment

Your email address will not be published. Required fields are marked *