மீண்டும் ஆழ்துளைக் கிணற்றில் சிறுவன்! உயிரோடு மீட்பு…!

கடந்த மாதம் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த திருச்சியை சேர்ந்த சுஜித், ஹரியானாவைச் சேர்ந்த ஷிவானி என்ற இருவரும் அநியாயமாக உயிரிழந்தனர். இது இந்தியா முழுவதும் பரவலாக விவாதங்களை எழுப்பி விழிப்புணர்வை உண்டாக்கியது. இருந்தும் இது போல ஆழ்துளைக் கிணறுகளில் குழந்தைகள் விழுவது
நின்றபாடில்லை.

இந்நிலையில் நேற்று மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் பகுதியில் கல்வான் என்ற கிராமத்தில் 200 அடி ஆழ்துளைக் கிணற்றில், ரித்தேஷ் என்ற ஆறு வயது சிறுவன் விழுந்துவிட்டான். உடனடியாக அந்த இடத்துக்கு விரைந்த தேசிய பேரிடர் குழு கயிறு கட்டி அவனை மீட்டுள்ளது. அதையடுத்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சிறுவன் இப்போது இயல்பாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குழந்தை உயிருடன் மீட்கப்பட்டது அனைவருக்கும் ஆறுதலையும் நிம்மதியையும் தந்துள்ளது.

Leave A Comment

Your email address will not be published. Required fields are marked *