தனுஷின் அடுத்த படத்தின் பெயர் பிரபல நடிகரின் பெயரா??

Related image

தனுஷ் நடிப்பில் வெளியான திரைப்படங்களான ‘வட சென்னை’, ‘ஃபக்கீரின் அசாதாரண பயணம்’ மற்றும் ‘அசுரன்’ ஆகிய மூன்றும் பாக்ஸ் ஆபிஸில் பெரும் வெற்றியைப் பெற்றன. இந்த படங்களில் அவர் நடிப்பிற்காக தேசிய மற்றும் சர்வதேச விருதுகளை வெல்லும் அளவுக்கு விமர்சன ரீதியான பாராட்டுகளும் பெற்றன.

தற்போது தனுஷின் 40 வது படமான ‘D40′ ஐ கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ளார்.’ D40′ க்கு ‘சுருளி’ என்று பெயரிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்று தெரிகிறது.

imagecredit: third party image reference

கவுண்டமணி-செந்தில் நகைச்சுவை மன்னர்களாக திகழும் முன்னரே, தமிழ் சினிமாவின் நகைச்சுவை உலகில் ஆட்சி புரிந்தவர் மறைந்த நகைச்சுவை நடிகர் சுருளி ராஜன். இந்த தலைப்பு அவரை நினைவூட்டுகிறது.

தனுஷ் மற்றும் கலையரசன் மற்றும் ‘கேம் ஆப் த்ரோன்ஸ்’ நட்சத்திரம் ஜேம்ஸ் காஸ்மோ, ஐஸ்வர்யா லக்ஷ்மி ஆகியோர் நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

image

Leave A Comment

Your email address will not be published. Required fields are marked *