இந்தியாவில் அறிமுகமாகப்போகும் F77 எலெக்ட்ரிக் பைக்; பைக் புள்ளிங்கோ ஆர்வம்

Image result for Ultraviolette F77 Electric Motorcycle

கர்நாடகா தலைநகர் பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் அல்ட்ராவைலட் ஆட்டோமோட்டிவ் நிறுவனம் மின்சார ஆற்றலில் தயாராகியுள்ள செயல்திறன் மிக்க பைக்கை F77 என்ற பெயரில் விற்பனைக்கு கொண்டு வந்தது.

புதிய அல்ட்ராவைலட் F77 மோட்டார்சைக்கிளுக்கு பெங்களூரு ஆன்-ரோடு மதிப்பில் ரூ. 3 லட்சம் முதல் ரூ. 3.25 லட்சம் வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மிரட்டலான தோற்றத்தில் இந்த பைக் காட்சியளிக்கிறது.

இந்த பைக்கில் 4.2kWh திறன் பெற்ற 3 மாடுலர் லித்தியம்-ஐயன் பேட்டரி உள்ளது. இதிலுள்ள எலெக்ட்ரிக் மோட்டருடன் சேர்ந்த இந்த பேட்டரி 33.5 பிஎச்பி பவர் மற்றும் 90 என்.எம் டார்க் திறனை வழங்கும்.

துவக்க நிலையில் இருந்து 100 கி.மீ வேகத்தை 2.9 விநாடிகளில் எட்டிப்பிடித்துவிடும் இந்த பைக், மணிக்கு 147 கி.மீ வேகத்தில் செல்லும். இந்த பைக்கை முழுமையாக சார்ஜ் செய்தால் 150 கி.மீ வரை செல்லும்.

அல்ட்ராவைலட் F77 எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிளில் ஸ்டீல் ட்ரெல்லிஸ் ஃபிரேம் வழங்கப்பட்டுள்ளது. பைக்கின் முன்பக்கத்தில் இன்வெர்டட் கேட்ரிஜ் ஃபோர்க்ஸ் மற்றும் பின்பக்கத்தில் மோனோ-ஷாக் அப்ஸபர்கள் ஆகியவை சஸ்பென்ஷன் தேவையை பூர்த்தி செய்கின்றன.
Image result for Ultraviolette F77 Electric Motorcycle
F77 எலெக்ட்ரிக் பைக்கின் முன்பக்க சக்கரத்தில் 320 மிமீ டிஸ்க் பிரேக் உள்ளது. பின்பக்கத்தில் 230 மிமீ டிக்ஸ் பிரேக் வழங்கப்பட்டுள்ளது. எதிர்கால வடிவமைப்பு தாத்பரியங்களை முன்வைத்து இந்த பைக் டிசைன் செய்யப்பட்டுள்லது.

அதன்படி கூர்மையான ஷார்ப்பிங், குறைந்தளவிலான பாடி கிராஃபிக்ஸ், மிருதுவான ஃப்லோயிங் லைன்ஸ் உள்ளிட்ட அம்சங்கள் கவனமீர்க்கின்றன. எல்.இ.டி திறனில் ஒளிரும் முகப்பு விளக்குகள், டெயில் விளக்குகள், பகல்நேர விளக்குகள், முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்ட்டர் போன்றவை பைக்கிற்கு மதிப்புக் கூட்டுகின்றன.

இ-சிம் இன்செர்ட் செய்யக்கூடிய வசதி பெற்ற LTE connectivity அம்சம் இந்த பைக்கில் இடம்பெற்றுள்ளது. தட்வெட்பத்தை அறிந்து கொள்ளும் சென்சார்ஸ், ஆக்டிவ் டிராக்கிங், ஷாக் மற்றும் இம்பேக்ட் சென்சார்ஸ், கஸ்டமைஸ் வசதியுடன் கூடிய பல்வேறு சிறப்பம்சங்கள் ஆகியவை F77 மாடலுக்கு வலு சேர்க்கின்றன.

இந்தியாவின் இருசக்கர மின்சார வாகன செக்மென்டில் முதல் செயல்திறன் மிக்க மாடல் என்ற பெயரில் அல்ட்ராவைலட் F77 எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் விற்பனைக்கு களமிறக்கப்பட்டுள்ளது.

இந்த பைக்கின் இடம்பெற்றுள்ள சிறப்பம்சங்கள், அதனுடைய தோற்றம் மற்றும் ஸ்போர்டி திறன் போன்றவை மோட்டார்சைக்கிளுக்கு வலு சேர்க்கின்றன. இந்தியாவில் F77 பைக் ரிவோல்ட் ஆர்வி400 மாடலுக்கு சரிநிகர் போட்டியை வழங்குகிறது.

Leave A Comment

Your email address will not be published. Required fields are marked *