அக்.22 இல் அறிமுகமாகும் புதிய விவோ ஸ்மார்ட்போன்; குறைந்த விலை நிறைந்த மனதுடன்

Image result for vivo u10

விவோ யு10 ஸ்மார்ட்போனின் “வாரிசு” ஆனது இந்த மாதம் இந்தியாவிற்கு வருகிறது, அது விவோ யு20 என்று அழைக்கப்படுகிறது. சீன ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர் ஆன விவோ அதன் யு தொடரின் கீழ் விவோ யு10 ஸ்மார்ட்போனை இந்தியாவில் சில மாதங்களுக்கு முன்பு அறிமுகம் செய்தது.

அதனை தொடர்ந்து இப்போது, விவோ யு20 ஆனது வருகிற நவம்பர் 22 ஆம் தேதி இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்படும் என்பதை விவோ நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. விவோ யு20 ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டு தேதியோடு சேர்த்து, அந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்பு மற்றும் சில முக்கிய அம்சங்களையும் விவோ வெளிப்படுத்தி உள்ளது.
Image result for vivo u10
அதன்படி வரவிருக்கும் விவோ யு20 ஆனது 5000 எம்ஏஎச் பேட்டரி, 18W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு போன்ற அம்சங்களை கொண்டிருக்கும். அதாவது விவோ யு20 பெட்டியின் உள்ளே 18W ஃபாஸ்ட் சார்ஜரர் பேக் செய்யும் என்று அர்த்தம்.

ஒருவேளை விவோ யு 20 ஆனது க்வால்காம் ஸ்னாப்டிராகன் 675 ஏஐஇ ப்ராசஸர் மூலம் இயக்கப்படும் பட்சத்தில் விவோ யு 20 தான் க்வால்காம் ஸ்னாப்டிராகன் சிப்செட்டை கொண்டு இயங்கும் இந்தியாவின் மூன்றாவது ஸ்மார்ட்போனாக இருக்கும். மற்ற இரண்டு ஸ்மார்ட்போன்கள் விவோ வி17 ப்ரோ மற்றும் விவோ வி15 ப்ரோ ஆகும். வெளியான டீஸரின் படி, விவோ யு20 ஆனது க்ரேடியன்ட் வடிவமைப்பைக் கொண்டிருக்கும் என்பதை வெளிப்படையாக காண முடிகிறது!
Image result for vivo u10
மேலும் முன்பக்கத்தில் வாட்டர் டிராப் நாட்ச், குறைந்தபட்ச பெசல்கள் மற்றும் பின்புறத்தில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார் மற்றும் பின்புற பேனலில் ட்ரிபிள் கேமரா அமைப்பு போன்றவைகளையும் காண முடிகிறது. இந்த ஸ்மார்ட்போனின் கேமரா அம்சங்களை பற்றிய தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை, நிறுவனம் இன்னும் வெளியிடவில்லை.

வரவிருக்கும் விவோ யு20 ஆனது 6 ஜிபி ரேம் மற்றும் யுஎஃப்எஸ் 2.1 ஸ்டோரேஜுடன் வரும் என்பதையும் விவோ வெளிப்படுத்தி உள்ளது. முழுமையான அம்சங்களை பற்றி அறிய வெளியீட்டு தேதியான, நவம்பர் 20 வரை நாம் காத்திருக்க வேண்டியது அவசியமாகிறது.

ஒட்டுமொத்தமாக விவோ யு20 ஆனது முன்னர் வெளியான விவோ யு10-ஐ விட மிகவும் மேம்படுத்தப்பட்ட பதிப்பாக இருக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் விவோ யு 10-ஐப் போலவே வரவிருக்கும் இந்த புதிய யு சீரிஸ் ஸ்மார்ட்போனும் பட்ஜெட் ஸ்மார்ட்போனாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விவோவின் யு-சீரிஸ் என்பது ஆன்லைனில் மட்டுமே வாங்க கிடைக்கும் ஒரு தொடர் ஆகும். அதாவது விவோ யு 20 ஸ்மார்ட்போனின் விற்பனை ஆனது அமேசான்.இன் வழியாக நடக்கும், இதையும் விவோ நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.

Leave A Comment

Your email address will not be published. Required fields are marked *