9 வருஷமா ஆடின பெரிய பிளேயரை… அசால்டாக தூக்கி வீசிய ராஜஸ்தான் ராயல்ஸ்!

RR

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஐபிஎல் டி20 போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இந்த வருட ஐபிஎல் தொடருக்கான அணி வீரர்களின் ஏலம் மற்றும் அணி வீரர்கள் மாற்றம் ஆகியவை தற்போது நடைபெற்று வருகின்றன.

Ipl cup

இந்நிலையில் இந்த ஐபிஎல் தொடருக்கான ராஜஸ்தான் அணியில் கடந்த ஒன்பது வருடங்களாக அதாவது கடந்த 2011-ஆம் ஆண்டிலிருந்து ராஜஸ்தான் அணிக்காக விளையாடி வரும் ரகானே இந்த வருட 2020ஆம் ஆண்டு ராஜஸ்தான் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். மேலும் அவரை தற்போது டெல்லி கேப்பிடல்ஸ் அணி விலைக்கு வாங்க இருக்கிறது என்று தகவல் வெளியாகியுள்ளது.ராஜஸ்தான் 4 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்ட ரஹானே பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டு வந்தார் மேலும் ராஜஸ்தான் அணியை சில போட்டிகளில் அவர் கேப்டனாகவும் வழி நடத்தி வந்தது குறிப்பிடத்தக்கது. ஆஸ்திரேலிய அணியின் முன்னணி வீரரான ஸ்மித் தடைக்குப் பிறகு மீண்டும் ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்று வருவதால் வருவதால் அவரை கேப்டனாக நியமித்துள்ளது.

Rahane1

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து நீக்கப்பட்ட ரஹானே சிறப்பான இளம் வீரர்களை கொண்ட டெல்லி அணிக்கு செல்வதால் மேலும் அந்த அணியின் பேட்டிங் பலப்படும் என்றும் கூறப்படுகிறது. அஸ்வின் பஞ்சாப் அணியில் இருந்து டெல்லி அணிக்காக மாறி கேப்டன் செய்யவும் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Comment

Your email address will not be published. Required fields are marked *