8-வது தேர்ச்சியா? ரூ.60 ஆயிரம் ஊதியத்தில் சென்னையிலேயே அரசாங்க வேலை!

Image result for வேலைவாய்ப்பு

சென்னையில் செயல்பட்டு வரும் என்சிசி அலுவலகத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர், ஓட்டுனர், போட் கீப்பர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு 8-வது தேச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள். ரூ.60 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : தேசிய மாணவர் படையில்

பணியிடம் : சென்னை தேசிய மாணவர் படை அலுவலகம்

மொத்த காலிப் பணியிடங்கள் : 08

பணி மற்றும் காலிப் பணியிட விபரங்கள்:-

  • ஓட்டுனர் – 4
  • ஸ்டோர் அட்டெண்டனட் – 1
  • அலுவலக உதவியாளர் – 2
  • போட் கீப்பர் – 1

கல்வித் தகுதி :

மேலே குறிப்பிடப்பட்டுள்ள அனைத்துப் பணியிடங்களுக்கும் எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். ஓட்டுநர் பணியிடத்திற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் கனரக, இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும். மூன்று ஆண்டுகள் ஓட்டுநர் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:-

அனைத்துப் பணிகளுக்கும் ஒரே விதமான வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி விண்ணப்பதாரர்கள் அனைவரும் குறைந்தபட்சம் 18 வயது நிரம்பியவராக இருந்தால் போதுமானது.

MBC, DC, BC (OBCM), BCM பிரிவினர் 32 வயதுக்கு உட்பட்டு இருக்க வேண்டும். மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களும் 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும். SC, SC (A), ST வகுப்பினர் 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும். SC, ST, BC, MBC வகுப்பைச் சார்ந்த முன்னாள் ராணுவத்தினர் 53 வயதிற்கு உட்பட்டும், இந்த வகுப்பைத் தவிர மற்ற முன்னாள் ராணுவத்தினர் 48 வயதிற்கு உட்பட்டும் இருக்க வேண்டும்.

Image result for job vacancy

ஊதியம் :

ஓட்டுனர் (லெவல் 8) : மாதம் ரூ.19,500 முதல் ரூ.ரூ.62,000 வரையில்

ஸ்டோர் அட்டெண்டன்ட் (லெவல் 2) : மாதம் ரூ.15,900 முதல் ரூ.50,400 வரையில்

அலுவலக உதவியாளர் (லெவல் 1) : மாதம் ரூ.15,700 முதல் ரூ.50,000 வரையில்

போட் கீப்பர் (லெவல் 1) : மாதம் ரூ15,700 முதல் ரூ.50,000 வரையில்

விண்ணப்பிக்கும் முறை:

சென்னை தேசிய மாணவர் படை அலுவலக பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் https://cms.tn.gov.in/sites/default/files/documents/QR_NCC_100818_0.pdf என்ற இணையதளத்தில் விண்ணப்பம் பெற்று, அதனை பூர்த்தி செய்து கீழ்கண்ட அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப்படிவம் அனுப்ப வேண்டிய முகவரி :

13 (TN) Bn NCC, No. 161, Periyar EVR High Road, Kilpauk, Chennai -600 010.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : டிசம்பர் 10 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் இங்கே கிளிக் செய்யவும்.

Leave A Comment

Your email address will not be published. Required fields are marked *