ஏர்செல்லைத் தொடர்ந்து மூட்டை முடிச்சு கட்ட தயாராகிறது வோடோஃபோன்… அரசு உதவுமா?

Image result for vodafone

ஏர்செல், டொகோமோவைத் தொடர்ந்து இழுத்து மூடும் நிலைக்கு வோடோஃபோன் சென்றுவிட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளன. அரசு உதவி செய்தால் மட்டுமே சேவை தொடர முடியும் என்று அந்த நிறுவனமும் தெரிவித்துள்ளது.

Image result for airtel

தொலைத் தொடர்புத் துறையில் புரட்சியை ஏற்படுத்தியது ரிலையன்ஸ். அதன்பிறகு ஏர்செல், ஏர்டெல், டாடா டெலிசர்வீசஸ் என்று பல ஜாம்பவான்கள் ஆதிக்கம் செலுத்தி வந்தனர். பிறகு ரிலையன்ஸ் ஜியோ வருகைக்குப் பிறகு பல தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மூடப்பட்டன. ஜியோவை சமாளிக்க வோடோஃபோன் – ஐடியா ஒன்றிணைந்தது. ஆனாலும் தாக்குப்பிடிக்க முடியாத நிலைதான்.

Image result for vodafone
இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கிடையே கட்டணத்தை நிர்ணயிப்பதில் நிலவும் போட்டி காரணமாக வோடோஃபோன் – ஐடியா நிறுவனத்தின் மதிப்பு அதலபாதாளத்துக்குச் சென்றுவிட்டது. இது குறித்து அந்நிறுவனத்தின் இந்திய தலைவர் நிக் ரெட் கூறுகையில், “இந்தியாவில் தன்னுடைய செயல்பாடுகளை நிறுத்தும் நிலைக்கு வோடோஃபோன் நிறுவனம் சென்றுவிட்டது. ஸ்பெக்ட்ரம் விலை நிர்ணயத்தில் ஏதேனும் உதவிகளை இந்திய அரசு செய்தால் மட்டுமே இதை தடுத்து நிறுத்த முடியும்” என்றார்.

Image result for vodafone

உலக அளவில் வோடோஃபோன் செயல்பாடுகள் நல்ல லாபத்தை ஈட்டி வருகின்றன. ஆனால், இந்திய செயல்பாடு அதன் ஒட்டுமொத்த வளர்ச்சியையும் பாதிக்கிறது என்று தகவல்கள் கூறுகின்றன. கடந்த 2018ம் ஆண்டு ஜூன் மாதம் வோடோஃபோன் நிறுவனத்தின் நிகர மதிப்பு 2 பில்லியன் யூரோவாக இருந்தது. அதன் பிறகு வோடோஃபோன் – ஐடியா இணைப்பு நிகழ்ந்தது. இதனால் மதிப்பு உயர்ந்திருக்க வேண்டும். ஆனால், இந்த ஆண்டு மே மாதம் அதன் மதிப்பு 1.5 பில்லியன் யூரோவாக குறைந்துள்ளது.

Image result for vodafone
“தற்போதைய சூழலில் தொழில் செய்ய முடியாத நிலை உள்ளது. தொடர்ந்து தொழில் செய்வதற்கான சாத்தியம் இல்லாமல் போனால், வோடோஃபோன் தன்னுடைய இந்திய செயல்பாடுகளை நிறுத்துவதைத் தவிர வேறு வழியில்லை” என்றார்.

Leave A Comment

Your email address will not be published. Required fields are marked *