சிக்கிய 2 கிலோ கடத்தல் தங்கம், சென்னையில் கைது செய்யப்பட்ட………..

Image result for airport gold smuggling

சென்னை விமானநிலையத்தில் மலேசியாவிலிருந்து கடத்தி வரப்பட்ட 2 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு 5 பேரை சுங்கத் துறை அதிகாரிகள் கைது செய்தனர்.

வெளிநாடுகளிலிருந்து சென்னைக்கு தங்க நகைகள் கடத்திவரப்படுவது நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. குறிப்பாக சென்னை, திருச்சி விமான நிலையங்களில் இந்த கடத்தல் நகைகள் அதிகமாக பறிமுதல் செய்யப்படுகின்றன.

சிங்கப்பூர், மலேசியா, அரபு நாடுகளிலிருந்து தமிழ்நாட்டிற்கு அதிகளவில் தங்கம் கடத்தப்பட்டுவருகிறது. தங்கம் நேரடியாக விமானம் மூலம் தமிழ்நாட்டிற்கு வருவதும் இலங்கை சென்று அங்கிருந்து விமானம் மூலமாகவும், கடல் மார்கமாகவும் தமிழ்நாட்டுக்கு கொண்டுவரப்படுவதும் நடைபெறுகிறது.

Image result for airport gold smuggling
இந்நிலையில் இன்று சென்னை பன்னாட்டு விமான முனையத்தில் இரண்டு கிலோ தங்கம், 45.4 லட்சம் ரூபாய் மதிப்பிலான வெளிநாட்டு பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

திருவாரூரைச் சேர்ந்த சையத் இப்ராஹிம், விருதுநகரைச் சேர்ந்த அப்துல் அஜிஸ், மும்பையைச் சேர்ந்த அசோக் ஆகியோர் உட்பட ஐந்து பேரை சுங்கத்துறை காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

கடந்த மூன்று நாள்களில் மட்டும் சென்னையில் 12 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave A Comment

Your email address will not be published. Required fields are marked *