17 ஆண்டுகள் கழித்து மீண்டும் அஜித்துடன் இணையும் வடிவேலு?

Image result for ajith vadivelu

நேர்கொண்ட பார்வை படத்திற்குப் பிறகு அஜித் மீண்டும் வினோத், போனிகபூர் கூட்டணியில் இணைந்துள்ளார். அஜித்தின் 60வது படமாக உருவாகும் இதற்கு வலிமை என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் வலிமை படத்தின் பூஜை முடிந்த நிலையில் டிசம்பர் மாதம் ஷூட்டிங் தொடங்கவுள்ளது. அஜித்தை தவிர இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகள் குறித்த தகவல் இன்னும் வெளியாகவில்லை.
Image result for ajith vadivelu
இந்த நிலையில் வலிமை படத்தில் அஜித்துடன் இணைந்து வடிவேலு நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் இது உறுதியான தகவல் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே இவர்கள் இருவரும் ஆனந்த பூங்காற்றே, மைனர் மாப்பிள்ளை, ராசி போன்ற படங்களில் நடித்துள்ளனர்.

கடைசியாக அஜித் மற்றும் வடிவேலு கடந்த 2002ம் ஆண்டு வெளியான ராஜா படத்தில் நடித்திருந்தனர்.
அப்போது அவர்களுக்கு இடையே ஏற்பட்ட சில கருத்து வேறுபாடு காரணமாகத் தான் இத்தனை ஆண்டுகள் இருவரும் சேர்ந்து நடிக்கவில்லை என்று பேசப்படுகிறது.

Image result for ajith vadivelu

வடிவேலு கடைசியாக இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வெளியான மெர்சல் படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு ஏற்பட்ட சில பிரச்சனை காரணமாக வடிவேலு படத்தில் நடிக்கவில்லை. தற்போது கூட இவர் மீது நடிகர் ஆர்.கே. சுரேஷ் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக இதே போன்று தான் வலிமை படத்தில் நஸ்ரியா நடிக்கிறார் என்று பேசப்பட்டது. ஆனால் தான் அப்படத்தில் நடிக்கவில்லை என்று நஸ்ரியா விளக்கம் அளித்தார்.

Leave A Comment

Your email address will not be published. Required fields are marked *