அவரு சொல்லிட்டாரு..நான் சொல்லல.. அவ்வளவு தான் வித்தியாசம்! மனம் திறந்த கோலி…

Kohli

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் அதிரடி வீரரான மேக்ஸ்வெல் மன அழுத்தம் காரணமாக கிரிக்கெட்டில் இருந்து தற்போது தற்காலிகமாக ஓய்வு பெற்றுள்ளார். இதுகுறித்து இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியிடம் பத்திரிகையாளர்கள் கேட்டதற்கு அவர் கூறியதாவது : சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் போது வீரர்கள் தங்கள் மனநிலையை பற்றி வெளிப்படையாக பேச வேண்டும்.

Kohli-1

அவ்வாறு தனது மனநிலை குறித்து வெளிப்படையாக பேசியதற்கு மேக்ஸ்வெல்லின் முடிவை நான் வரவேற்கிறேன். மேலும் மேக்ஸ்வெல் சந்தித்திருக்கும் இதுபோன்ற காலகட்டத்தை நானும் ஏற்கனவே சந்தித்திருக்கிறேன். கடந்த 2014ஆம் ஆண்டு இங்கிலாந்து தொடரில் தொடர்ந்து என்னால் சிறப்பாக பேட்டிங் செய்ய முடியாமல் தவித்து வந்தேன். மேலும் யாரிடம் என்ன பேசுவது, யாரிடம் என்ன கூறுவது என்று தெரியாமல் அடுத்து என்ன செய்யப் போகிறோம் என்பது தெரியாமல் சரியான மனநிலையில் இல்லாமல் மிகவும் மன அழுத்தம் என்னை பாதித்தது. அந்த தொடரில் அடுத்தடுத்து அவுட்டாகி வெளியேறும்போது நான் என்ன செய்கிறேன் என்பது எனக்கே தெரியாது. அப்போது இனி கிரிக்கெட்டில் எல்லாம் முடிந்து விட்டது இனி நம்மால் எதுவும் செய்ய முடியாது என்று மனநிலையும் எனக்கு தோன்றியது.

Kohli

வீரர்களுக்கு இது போன்று மன அழுத்தம் வருவதை வெளிப்படையாக கூற வேண்டும். அதற்கு மேக்ஸ்வெல் முன்மாதிரியாக இருக்கிறார். மேலும் போதுமான இடைவெளி தேவைப்படும்போது தைரியமாக சொல்லிவிட வேண்டும் இதை நானும் அனுபவித்திருக்கிறேன் என்று கோலி கூறியது குறிப்பிடத்தக்கது.

Leave A Comment

Your email address will not be published. Required fields are marked *