வெளியூருக்கு விசா கிடைக்க இந்த கோவிலுக்கு செல்லுங்கள்

Image result for tamilnadu temple

இன்று விஞ்ஞான உலகில் பல விஞ்ஞானிகளால் கூட பதில் சொல்ல முடியாத நிகழ்வுகள் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றது, நமது பல கேள்விகளுக்கு விஞ்ஞானத்தில் பதில் இல்லை என்பதே உண்மை. பல அமானுஷ்யமான விஷயங்கள் நம்மை மீறிப் பல நடந்து கொண்டிருக்கின்றது அதற்கு விஞ்ஞானத்தில் ஆதாரம் இருக்கா என்று கேட்டால் நிச்சயமாக இல்லை என்றுதான் சொல்ல முடியும். விஞ்ஞானத்தில் கண்ணால் பார்ப்பது அல்லது ஆராய்ச்சி செய்து அறிந்த விஷயங்களை மட்டுமே உண்மையை எனக் கூறுவது, அறிவு சார்ந்த விஷயம் அல்ல எனக் கூறுகிறார்கள்.

ஏனென்றால் நூறு வருடங்களுக்கு முன்பு நம்மால் எங்கிருந்து கொண்டு வெளிநாட்டில் இருக்கும் ஒருவருடன் பார்த்துப் பேசமுடியும் என்று கூறியிருந்தால் அன்று நம்மளை முட்டாள் என்று கூறியிருப்பார்கள். இன்று நாம் வீடியோ காலில் அதைச் செய்து கொண்டிருக்கிறோம். விஞ்ஞானத்தால் அதை அன்று செய்யமுடியவில்லை என்பதனால் அது பொய்யில்லை. அதேபோன்று தான் கடவுளும் எனப் பலரும் கூறிவருகின்றனர் கடவுள் இல்லை என்பதில்லை, அதே நேரத்தில் அதை இன்னும் விஞ்ஞானிகளால் நிரூபிக்க முடியவில்லை என்பதே உண்மை என்று கூறுகின்றனர். நம்மில் ஒரு சிலர் உண்டு அனைத்து காரியங்களையும் கடவுளிடம் பிரார்த்தித்துச் சாதித்து விடுவார்.

சில்கூர் ஸ்ரீ பாலாஜி கோவில்:

இந்த பழமை வாய்ந்த இந்து கோவில் ஆனது ஆந்திராவில் ஹைதராபாத்தில் உள்ள ஒஸ்மன் சாகர் என்னும் இடத்தில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் உண்டியல் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. உண்டியல் இல்லாத கோவில் என்பதுதான் சுற்றுவட்டாரத்தில் மிகவும் வித்தியாசமாகப் பார்க்கக் கூடிய ஒரு கோவிலாக இருக்கின்றது. உண்டியல் மட்டுமல்லாது அங்கு யாரும் நன்கொடைகளும் பெறுவது இல்லை. மேலும் அரசின் கட்டுப்பாட்டில் அது இயங்கவில்லை, உண்டியல் நன்கொடைகள் பெறுவது கிடையாது என்பது மட்டும் இந்த கோவிலின் சிறப்பம்சம் கிடையாது. கடவுளைத் தரிசிக்க இந்த கோவிலில் விஐபி வரிசை கிடையாது, கடவுளின் முன் அனைவரும் சமம் என்று கருதியே கோவிலில் விஐபி வரிசை இல்லை. இந்த கோவிலானது கிட்டத்தட்ட 500 வருடங்களுக்கு முன் கட்டப்பட்டது. ஹைதராபாத்திலிருந்து 45 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது இந்தக் கோவில்.

இன்று இந்த கோவிலுக்கு 75000 முதல் ஒரு லட்சம் பக்தர்கள் வரை ஒவ்வொரு வாரமும் தரிசனம் செய்து வருகின்றனர். இந்த கோவில் அக்கணா மடனா காலகட்டங்களில் கட்டப்பட்டது எனக் கூறுகின்றனர். பக்த ராமதாஸ் அவர்களின் மாமா எனக் கூறுகின்றனர்.
முக்கியமாக இந்த கோவிலில் ஸ்ரீ பாலாஜி வெங்கடேஸ்வரர் இன் நேரடி அருள் இருப்பதாகப் பலரும் நம்பி வருகின்றனர். இதனாலேயே இந்த கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது.

விசா கோவில்

மேலே குறிப்பிட்ட விஷயங்களில் மட்டும் இந்த கோவில் பிரபலமானது அல்ல. இன்னும் சில சுவாரசியமான நிகழ்வுகள் இந்த கோவிலை இன்னும் பிரபலப்படுத்தி உள்ளது. 1980களில் அமெரிக்காவிற்குச் செல்வதற்கான சில மாணவர்கள் விசா விண்ணப்பித்து இருந்தனர் ஆனால் எதிர்பாராத விதமாக அவர்களது விசா தள்ளுபடி செய்யப்பட்டது. அப்பொழுது சில மாணவர்கள் இந்த கோவிலின் சிறப்பை அறிந்து இங்கு வந்து பிரார்த்தனை செய்துள்ளனர் பிரார்த்தனை செய்து ஒரு சில நாட்களிலேயே, அவர்களது தள்ளுபடி செய்யப்பட்ட விசா, தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்கள் அமெரிக்கா சென்றுள்ளனர். இந்தச் செய்தி காட்டுத் தீயாகப் பரவ பல பேரும் இங்கு வந்து பிரார்த்தனை செய்து பலனடைந்துள்ளனர்.

நமது நாட்டில் அமெரிக்காவிற்குச் செல்ல வேண்டும் என என் விரும்புவோரின் எண்ணிக்கை மிகவும் அதிகம். ஏனென்றால் அங்கு இருக்கும் வேலைவாய்ப்பு மற்றும் மேற்படிப்பு படிப்பதற்கான வசதிகள். மேற்படிப்பு அமெரிக்காவில் படித்தால் அவர்களின் வாழ்க்கைமுறையைப் பெருமளவில் மாற்றம் பெறும் எனப் பலரும் நம்புகின்றனர். ஆனால் அமெரிக்காவிற்குச் செல்ல விசா கிடைப்பது கொஞ்சம் சிக்கல் வாய்ந்ததாகவே உள்ளது. அவர்கள் இந்தக் கோவிலின் சிறப்பை பற்றி அறிந்து இங்கு வந்து தரிசனம் செய்து அதில் பலபேர் நேர்முகத்தில் வெற்றி பெற்றும் இருக்கிறார்கள்.

அமெரிக்கா செல்வதற்கான விசா நேர்முகத்தேர்வுக்கு இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு முன்பு இங்கு வந்து பிரார்த்திப்பது பலரும் வழக்கமாக வைத்துள்ளனர். நேர்காணலுக்கு முன்னர் மூன்று முறை கோவிலைச் சுற்றி வருவார். பின்பு நடந்து முடிந்து நேர்காணலில் வெற்றி பெற்றவுடன் 108 முறை கோவிலைச் சுற்றி வருவதைப் பலரும் வழக்கமாக வைத்துள்ளனர். 108 முறை சுற்றி வந்தது விசா கிடைத்துவிடும் என்றே பலரும் நம்புகின்றனர். அவர்களின் நம்பிக்கையையும் வீண் போகாதவாறு இங்கே தரிசனம் செய்த பெரும்பாலான மக்களின் விசா கிடைத்து அமெரிக்கா சென்றுள்ளனர். இந்த செய்தி கேட்டு ஹைதராபாத் மட்டுமல்ல ஆந்திரா தெலுங்கானா மற்றும் தென்னிந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் கோவிலைத் தரிசித்து வந்த வண்ணம் உள்ளனர். அதில் பெரும்பாலானோருக்கு விசா கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

சற்று சிந்தித்துப் பாருங்கள் இந்த கோவிலில் கடவுளிடம் பிரார்த்தனை செய்து விசா பெற்று அமெரிக்காவில் சென்று அறிவியல் மற்றும் விஞ்ஞானம் படிக்கவே சென்று வருகின்றனர். என்னதான் அறிவியல் வளர்ச்சி பெற்றிருந்தாலும் சில நம்பிக்கைகளில் இடமிருந்து நம் மக்களை என்றுமே பிரிக்க இயலாது. என்னதான் அமெரிக்கா சென்று படித்து அந்தத் துறையிலேயே வேலை செய்தாலும், நம் இந்தியாவைச் சேர்ந்த பெருமக்கள் கடவுள் நம்பிக்கையோடு தான் அனைத்து காரியங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். கடவுள் சம்பந்தப்பட்ட விஷயங்களில் பலரும் லாஜிக் பார்ப்பதில்லை.

Leave A Comment

Your email address will not be published. Required fields are marked *