ஜெ. வேடத்தில் நடிக்க கஷ்டப்படும் கங்கணா.. அட இது என்னப்பா தமிழுக்கு வந்த சோதனை?

Image result for கங்கனா

தலைவி படத்துக்காக தமிழ் கற்று வரும் நடிகை கங்கனா ரனாவத், அது தனக்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது என கூறியுள்ளார்.

மும்பை: தலைவி படத்துக்காக மிகவும் கஷ்டப்பட்டு தமிழ் கற்று வருவதாக நடிகை கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார்.

Related image

மறைந்ந முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை பல இயக்குனர்கள் திரைப்படமாக எடுத்து வருகின்றனர். அதில் முக்கியமான படம் தலைவி.

இந்தி மற்றும் தமிழில் எடுக்கப்படும் தலைவி படத்தில் பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் ஜெயலலிதா வேடத்தில் நடிக்கிறார். இப்படத்தை இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்குகிறார்.

Image result for கங்கனா

தலைவி படத்தின் படப்பிடிப்பு கடந்த 10ம் தேதி தொடங்கியது. படப்பிடிப்பு தளத்தில் இருந்து எந்த புகைப்படங்களும் வெளியாகவில்லை. தலைவி என எழுதப்பட்ட கிளாப் போர்டு போட்டோவை மட்டுமே வெளியிட்டனர். இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Image result for கங்கனா

இந்நிலையில் மும்பையில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட நடிகை கங்கனா ரனாவத், தலைவி படம் குறித்து பேசியுள்ளார். இந்த படத்திற்காக தான் கஷ்டப்பட்டு தமிழ் கற்றுவருவதாக அவர் கூறியுள்ளார்.

Related image

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது, “தமிழ் கற்பது மிகவும் கஷ்டமாக இருக்கிறது. இந்த படம் தமிழ் மற்றும் இந்தியில் எடுக்கப்படுவதால் நாம் நிச்சயம் அதற்கு நியாயமாக நடந்துகொள்ள வேண்டும். தமிழை சுலபமாக பேசிவிட முடியாது என்பதால், நிறைய வசனங்களை மனப்பாடம் செய்து நடிக்கிறேன்

Related image

படத்தின் கதைப்படி எனக்கு தமிழ் தெரிந்திருக்க வேண்டியது அவசியம். எனவே முழுமையாக தமிழ் கற்க வேண்டும் என்ற எண்ணத்தில் பயின்று வருகிறேன். ஆங்கில மொழியைக்கூட அப்படி தான் கற்றுக்கொண்டேன்”, என கங்கனா தெரிவித்துள்ளார்.

Related image

தமிழ் மொழியை கற்பதை தவிர, தலைவி படத்திற்காக பரத நாட்டியமும் கற்றுக்கொண்டுள்ளார் கங்கனா. அதேபோல் பிராஸ்தடிக் மேக்கப்பிற்காகவும் கங்கனா நிறைய நேரம் செலவழித்துள்ளார். ஜெயலலிதா போன்ற மிகப்பெரிய அரசியல் தலைவர் மற்றும் நடிகையின் கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக, கங்கனா மேற்கொண்டு வரும் முன்தயாரிப்புகளை பார்த்து தமிழ் மற்றும் இந்தி திரையுலகம் அவருக்கு பாராட்டு தெரிவித்துள்ளது.

Leave A Comment

Your email address will not be published. Required fields are marked *