இந்தியா – வங்கதேசம் அணிகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், வங்கதேச அணி, டாஸ் வென்ற நிலையில் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
இந்தியா வந்துள்ள வங்கதேச கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்றது. இந்த தொடரில், முதல் போட்டியில், வங்கதேசம் வெற்றி பெற்ற நிலையில், மற்ற 2 போட்டிகளிலும் இந்திய அணி வென்று 2-0 என்ற கணக்கில் தொடரை வென்றது.
சர்வதேச டெஸ்ட் அணிகளின் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள இந்திய அணி, 9வது இடத்தில் உள்ள வங்கதேச அணியுடன் மோத உள்ளது. டி20 தொடர் முடிவடைந்துள்ள நிலையில், வங்கதேச அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. முதல் போட்டி இந்தூர் மைதானத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது.
வங்கதேச நட்சத்திர வீரர் ஷகிப் அல் ஹசன் இல்லாதநிலையில், இளம்வீரர் மோமிநுல் ஹேக் கேப்டன் பதவியை ஏற்றுள்ளார்.
இந்திய அணியில் குல்தீ்ப் யாதவ், மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். 3 சீமர்களுடன் இந்திய அணி களமிறங்கி உள்ளது.
ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 ஹெச் டி சேனலில் போட்டியை நேரடியாக காணலாம். ஆன்லைனில் ஹாட் ஸ்டாரில் போட்டியைக் காணலாம். தவிர, இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் தளத்தில் லைவ் ஸ்கோர் கார்டை நீங்கள் கண்டு ரசிக்கலாம்.