மீண்டும் கேப்டனாக கோலி: அதிரடியான ஆட்டம் இன்று தொடக்கம்!

Image result for இந்தியா - வங்கதேசம் டெஸ்ட் போட்டி

இந்தியா – வங்கதேசம் இடையேயான டெஸ்ட் போட்டிகள் இன்று தொடங்க இருக்கின்றன.

Image result for இந்தியா - வங்கதேசம் டெஸ்ட் போட்டி

இந்தியா – வங்கதேசம் இடையேயான டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகள் இந்தியாவில் நடைபெற்று வருகின்றன. முதலாவதாக நடந்த 3 சுற்றுகள் கொண்ட டி20 போட்டியில் இந்தியா இரண்டு ஆட்டங்களை கைப்பற்றி வெற்றிபெற்றது.

Image result for இந்தியா - வங்கதேசம் டெஸ்ட் போட்டி

இந்நிலையில் இன்று முதல் டெஸ்ட் போட்டி மத்திய பிரதேசத்தில் உள்ள ஹோல்கர் ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. 20 ஓவர் போட்டிகளில் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விருப்ப ஓய்வில் இருந்ததால் ரோகித் ஷர்மா கேப்டனாக அணியை வழிநடத்தினார். தற்போது மீண்டும் கோலி டெஸ்ட் தொடர் கேப்டனாக களம் இறங்குகிறார்.

Image result for இந்தியா - வங்கதேசம் டெஸ்ட் போட்டி

விராட் கோலி, புஜாரா, மயங்க அகர்வால், ரோகித ஷர்மா, ரஹானே என பேட்டிங்கில் இந்தியா அசுர பலத்துடன் இருப்பதால் ரன்ரேட் அதிகரிக்கும் வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. வங்கதேச கேப்டன் ஷகிப் அல் ஹசன் இல்லாதது அணிக்கு மிகப்பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

Image result for virat kohli

புதிய கேப்டன் மொனுமில் ஹக் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும் கேப்டனாக அணியை சரியாக வழிநடத்தும் திறமை உள்ளதா என்பது சந்தேகமே!

Image result for இந்தியா - வங்கதேசம் டெஸ்ட் போட்டி

மொத்தத்தில் இந்தியா – வங்கதேசம் ஆட்டம் இந்தியாவுக்கு சற்று எளிதானதாகவும், வங்கதேசத்துக்கு கற்றுக்கொள்ள கூடியதாகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave A Comment

Your email address will not be published. Required fields are marked *