முதல் மனைவி சம்மதத்தோடு இரண்டாவது திருமணம்! பின்னர் நடந்த சோகம்..?

Image result for murder
ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சேதுபதி. இவரின் மனைவி ராணி. இவர்கள் இருவருக்கும் திருமணம் ஆகி 10 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை. இதனால் கணவர் மேல் உள்ள அன்பால் அவர் இரண்டாவது திருமனம் செய்துகொள்ள முதல் மனைவி ராணி சம்மதித்து திருமனத்தையும் நடத்தி வைத்துள்ளார்.

ஆனால் திருமணத்துக்குப் பின் இரண்டாவது மனைவியின் வீட்டிலேயே இருந்துகொண்டு முதல் மனைவியைக் கண்டுகொள்ளாமல் இருந்துள்ளார் சேதுபதி. அவரது அன்றாட  செலவுகளுக்குக் கூட பணம் கொடுக்காமல் இருந்துள்ளார். இதனால் தனக்கு சொத்தில் பங்கு வேண்டும் என ராணி கோரியுள்ளார். ஆனால் இதற்கு சேதுபதி சம்மதிக்கவில்லை.
Image result for murder
இது சம்மந்தமாக இருவருக்கும் இடையில் பிரச்சனை நிலவி வந்துள்ளது. இந்நிலையில் நேற்று ராணி மீண்டும் சொத்து பிரச்சனையை எழுப்பவே கோபமான சேதுபதி கத்தியால் அவரின் கழுத்தை அறுத்துக் கொலை செய்துவிட்டு அங்கிருந்து ஓடியுள்ளார்.  இந்த கொலை சம்மந்தமாக வழக்குப்பதிவு செய்த போலிஸார் சேதுபதியைத் தேடி வருகின்றனர்.

Leave A Comment

Your email address will not be published. Required fields are marked *