சிகெரெட்டால் மனைவியைக் கொளுத்திய கணவன் – சென்னையில் பயங்கரம் !

Related image

சென்னை ஆதம்பாக்கத்தில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறால் கணவன் மனைவியை எரித்துக் கொலை செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Image result for சிகரெட்டால் மனைவி கொளுத்திய கணவன்

சென்னை ஆதம்பாக்கத்தில் உள்ள கக்கன் நகரில் வசித்து வருபவர்கள் ராஜன் மற்றும் பஞ்சவர்ணம் தம்பதியினர். இந்நிலையில் இவர்கள் இருவருக்கும் இடையில் அடிக்கடி சண்டை எழுந்துள்ளது.

Image result for சிகரெட்டால் மனைவி கொளுத்திய கணவன்

இதையடுத்து வழக்கம்போல இருவரும் சண்டை போட்டுக்கொண்டிருக்க கோபமான ராஜன் வீட்டில் இருந்த மண்ணெண்ணெய்யை பஞ்சவர்ணத்தின் மேல் ஊற்றி சிகரெட்டால் கொளுத்தியுள்ளார்.

Image result for arrest

இதனால் அவர் உடல் முழுவதும் தீயோடு அலறியுள்ளார். சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு உடனடியாக அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அவரிடம் வாக்குமூலம் பெற்ற அதிகாரிகள் உடனடியாக ராஜனைக் கைது செய்தனர்.

Leave A Comment

Your email address will not be published. Required fields are marked *