ஒரே ஆண்டில் 700 கோடி தேர்தல் நன்கொடை : பாஜகவின் வசூல் வேட்டை அம்பலம்!

Related image

இந்தியாவில் உள்ள அரசியல் கட்சிகள் 20 ஆயிரத்துக்கு மேல் நன்கொடை பெற்றால் அதை ரொக்கப் பணமாகப் பெறக்கூடாது. காசோலை அல்லது ஆன்லைன் பரிமாற்றம் மூலம் பெறவேண்டும் என தேர்தல் விதிமுறை இருக்கிறது.

Image result for modi

அதன்படி ஒவ்வொரு ஆண்டும் அரசியல் கட்சிகள் தாங்கள் பெற்ற நன்கொடை குறித்து தேர்தல் ஆணையத்திடம் தெரிவிக்க வேண்டும் என்பது விதிமுறையில் உள்ளது. இந்நிலையில், தற்போது பா.ஜ.க அளித்துள்ள அறிக்கையில் நாட்டின் மிகப்பெரிய கார்ப்பரேட் முதலாளிகளிடமிருந்து, 2018-19 ம் ஆண்டில் மட்டும் ரூ.700 கோடியை தேர்தல் நன்கொடையாக பா.ஜ.க பெற்றுள்ளது.

Image result for tata company

இதில் பெரும் பகுதி தொகை டாடா நிறுவனம் நிர்வகிக்கும் அறக்கட்டளை மூலம் வந்துள்ளது தெரியவந்துள்ளது. குறிப்பாக, டாடா நிறுவனத்தின் கீழ் இயங்கும் புரோகிரஸிவ் எலக்ட்ரோல் டிரஸ்ட் அமைப்பு மூலம் சுமார் 356 கோடி ரூபாயை பா.ஜ.க-வுக்கு நன்கொடையாக அளிக்கப்பட்டுள்ளது.

Image result for புருடென்ட் எலக்ட்ரோல்

அதேபோல், புருடென்ட் எலக்ட்ரோல் டிரஸ்ட் 54.25 கோடி ரூபாயும், ஹீரோ மோட்டோகார்ப் ரூப்பாய் 12 கோடியும் வழங்கியுள்ளது. மேலும் பார்தி குழுமம், ஜூப்ளியன்ட் புட்வொர்க்ஸ், ஓரியண்ட் சிமென்ட், டி.எல்.ப், ஜே.கே டயர்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களும் பா.ஜ.க-வுகு அதிகமான நன்கொடை அளித்துள்ளனர்.

Image result for bjp

இந்த நன்கொடைகள் பெரும்பாலும் ஆன்லைன் பரிமாற்றம், காசோலை ஆகியவை மூலம் தனி நபர்களிடம் இருந்தும், நிறுவனங்களிடம் இருந்தும் பெற்ற நன்கொடையை மட்டுமே. தேர்தல் நிதிப்பத்திரங்கள் வாயிலாக எவ்வளவு நிதி வந்தது என்பது குறித்துக் குறிப்பிடவில்லை. அந்த தகவலும் வரும்போது இந்ததொகை அதிகரிக்கக்கூடும் எனக் கூறப்படுகிறது.

Leave A Comment

Your email address will not be published. Required fields are marked *