ட்விட்டரில் இருந்து விலகியது ஏன்.? குஷ்பு கூறிய பரபரப்பு காரணம் இதுதான்.!

Image result for குஷ்பு"

ட்விட்டரிலிருந்து திடீரென விலகிய குஷ்பு அதற்கான காரணத்தையும் விளக்கியுள்ளார்.காங்கிரஸ் செய்தித் தொடர்பாளராக உள்ளவர் குஷ்பு. சமூக வலைதளங்களில் இவரது செயல்பாடுகள் அதிகமாக இருந்து வந்தது. பாஜகவை கடுமையாக விமர்சித்து வந்தார்.

அது போல் பெண்களுக்கு ஏற்படும் அநீதிகளையும் ட்விட்டர் வாயிலாக தட்டி கேட்டு வந்தனர். மேலும் கணவர் சுந்தர் சி இயக்கி வரும் படங்கள், அவரது தயாரிப்பு நிறுவனங்களின் படங்கள், தொலைக்காட்சி தொடர்கள் ஆகியவை குறித்த செய்திகளையும் அவர் வெளியிட்டு வந்தார்.

இந்த நிலையில் ட்விட்டரில் இருந்து அவர் திடீரென விலகினார். இதற்கான காரணம் எதையும் அவர் தெரிவிக்கவில்லை.Image result for குஷ்பு"

இதுகுறித்து குஷ்பு கூறுகையில் எனது ட்விட்டர் கணக்கை டீஆக்டிவேட் செய்துவிட்டேன். அதில் நேரத்தை செலவிட வேண்டாம் என முடிவு செய்தேன்.இதற்கான காரணம் ஏதும் இல்லை. நிம்மதியாக வாழ விரும்புகிறேன். ட்விட்டர் தளத்தில் நிறைய எதிர்மறை விஷயங்கள் உள்ளன என்றார் குஷ்பு.

Leave A Comment

Your email address will not be published. Required fields are marked *