நான் மட்டும் பாய் பிரெண்ட் வச்சுக்கக்கூடாதா.. உடனே கதைகட்டுவீர்களா..பிரபல நடிகை கோபம்

Image result for நடிகை மௌனி ராய்

தான் யாரையும் காதலிக்கவில்லை என நடிகை மௌனி ராய் தெரிவித்துள்ளார்.

மும்பை: துபாய் காதலர் குறித்து முதல் முறையாக விளக்கம் அளித்துள்ளார் நடிகை மௌனி ராய்.

Related image

நாகினி என்ற ஒரே சீரியல் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமானவர் நடிகை மௌனி ராய். இவர் தற்போது படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். எனவே சீரியல்களில் நடிப்பதில்லை.

மௌனி ராய் நடித்த ‘மேட் இன் சைனா’ திரைப்படம் சமீபத்தில் வெளியானது. ஆனால் இந்த படம் வசூல் ரீதியாக பெரிதாக கைக்கொடுக்கவில்லை.

இந்நிலையில் துபாய் நாட்டை சேர்ந்த வங்கியாளர் சூரஜ் நம்பியார் என்பவரை மௌனி ராய் காதலிப்பதாக பேசப்பட்டது. ஆனால் அது உண்மையல்ல என அவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

Image result for mouni roy

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது, ” நான் யாரையும் காதலிக்கவில்லை. நான் இப்போது சிங்கிள் தான். இதுபோன்ற செய்திகள் எல்லாம் எப்படி பரவுகிறது என்பதே எனக்கு புரியவில்லை. மற்றவர்களை போல என்னையும் ஆண் நண்பர்கள் வைத்துக்கொள்ள அனுமதியுங்கள். ஆண் நண்பர்களுடன் நான் நேரம் செலவழித்தால், உடனே அது காதலாகிவிடாது.

Image result for mouni roy

எனக்கு பிடித்த மாதிரியான நபரை நான் பார்க்கும் போது, நிச்சயம் திருமணம் செய்துகொள்வேன். எல்லோருக்கும் தெரிவித்து ஊரைக்கூட்டி தான் திருமணம் செய்துகொள்வேன். என்னை திருமணம் செய்து கொள்ளும்படி எனது குடும்பத்தினர் யாரும் நிர்பந்திக்கவில்லை. எனக்கு எந்த அவசரமும் இல்லை”, என மௌனி ராய் தெரிவித்துள்ளார்.

Image result for mouni roy

ஏற்கனவே நடிகர் மோஹித் ரெய்னாவை மௌனி ராய் காதலிப்பதாக பாலிவுட்டில் கிசுகிசுக்கப்பட்டது. ஆனால் அதுகுறித்து இருவருமே வாய்த்திறக்கவில்லை. அந்த தகவலை இருவருமே மறுக்கவும் இல்லை, ஆமோதிக்கவும் இல்லை. இந்த நிலையில் தான் சூரஜ் நம்பியார் உடனான காதல் கிசுகிசுவை மறுத்துள்ளார் மௌனி ராய்.

Related image

படங்களை பொறுத்தவரை மிக அதிகமான பொருட்செலவில் பிரமாண்டமாக தயாராகிவரும் பிரமாஸ்த்ரா படத்தில் வில்லியாக நடித்து வருகிறார் மௌனி. இந்த படத்தில் ரன்பீர் கபூர், ஆலியா பட் ஆகியோர் நாயகன், நாயகியாக நடிக்கின்றனர். இந்த படத்தை பெரிதும் எதிர்பார்த்துள்ளார் மௌனி ராய்.

Leave A Comment

Your email address will not be published. Required fields are marked *