சீக்கிரம் கல்யாணம் ஆக விஜய் டிவியில் சேருங்கள், மீண்டும் இன்னொரு சீரியல் ஜோடிகள்……

Image result for anwar sameera

தொலைக்காட்சி சீரியல்களில் ஜோடியாக நடிப்பவர்கள் திருமணம் செய்துக் கொள்வது ஒன்றும் புதிதல்ல. சேத்தன் – தேவதர்ஷினி-யில் ஆரம்பித்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு, திருமணம் செய்துக் கொண்ட ‘ராஜா ராணி’ சஞ்சீவ் – ஆல்யா மானாஸா வரை இந்தப் பட்டியல் நீளும்.

Myna Nandini Wedding

மைனா நந்தினி திருமணம்…

இதற்கிடையே ‘ராஜா ராணி’, ‘நாயகி’, ‘சத்யா’ உள்ளிட்ட தொடர்களின் நடிகர் யோகேஷ்வரனை மறுமணம் செய்துக் கொண்டுள்ளார் சீரியல் நடிகை மைனா நந்தினி. இந்நிலையில் மீண்டும் ஒரு சீரியல் ஜோடி, நிஜ வாழ்க்கையிலும் இணைந்துள்ளது. ’பகல் நிலவு’ சீரியலில் நடித்து வந்த அன்வர் – சமீரா கடந்த திங்கட்கிழமை முறைப்படி இல்வாழ்க்கையில் இணைந்துள்ளனர். இதனை சமீரா ஷெரீஃப் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார்.

மற்றவர்களுடன் ஒப்பிடும் போது, அன்வர் – சமீரா ஜோடி, ஏற்கனவே காதலில் இருந்து தான், பகல் நிலவு சீரியலில் ஜோடிகளாக ஒப்பந்தமாகினர். இதனை அவர்களே பல நேர்க்காணல்களில் உறுதிப்படுத்தியுள்ளனர். இரு வீட்டாரின் பெற்றோர் சம்மதத்துடன் நடைப்பெற்றிருக்கும் இத்திருமணத்தில், நெருங்கிய உறவினர்களும், நண்பர்களும் கலந்துக் கொண்டு மணமக்களை வாழ்த்தியுள்ளனர்.

Leave A Comment

Your email address will not be published. Required fields are marked *