ஹாங்காங் ஓபன் பட்ட பேட்மிண்டன் போட்டி; பி.வி. சிந்து 2வது சுற்றுக்கு முன்னேற்றம்

Image result for pv sindhu
ஹாங்காங் ஓபன் பட்ட பேட்மிண்டன் போட்டிகள் ஹாங்காங்கில் நடந்து வருகின்றன.  இதில் மகளிர் ஒற்றையர் பிரிவு போட்டி ஒன்றில் உலக சாம்பியனான இந்திய வீராங்கனை பி.வி. சிந்து, கொரியா நாட்டின் கிம் கா யூன் விளையாடினர்.  இதில் சமீப போட்டிகளில் முதல் சுற்றில் தவறுகள் செய்த சிந்து, இந்த போட்டியில் வெற்றி பெறும் நோக்குடன் விளையாடினார்.
ஹாங்காங் ஓபன் பட்ட பேட்மிண்டன் போட்டி; பி.வி. சிந்து 2வது சுற்றுக்கு முன்னேற்றம்
36 நிமிடங்கள் நடந்த இந்த போட்டியில் 21-15, 21-16 என்ற செட் கணக்கில் கிம்மை வீழ்த்தி சிந்து 2வது சுற்றுக்குள் நுழைந்து உள்ளார்.  அவர் தாய்லாந்து நாட்டின் பூசனன் ஓங்பாம்ரங்பானை எதிர்த்து அடுத்த போட்டியில் விளையாடுகிறார்.

Leave A Comment

Your email address will not be published. Required fields are marked *