சுர்ஜித் தாய்க்கு நிவாரண நிதி இத்தனை ‘கோடி, அரசு’ வேலையா.? கொந்தளிக்கும் மக்கள்.! காரணம்.?

Image result for சுர்ஜித் தாய்கடந்த அக்டோபர் மாதம் 25-ம் தேதி இரண்டரை வயது ஆண்குழந்தை சுஜித் வில்சன் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தான், மிகுந்த போராட்டத்திற்கு பிறகு சிறுவன் சுஜித்தை சடலமாக மீட்டது தமிழக அரசு.

இந்நிலையில் உயிரிழந்த சிறுவன் சுஜித் குடும்பத்திற்கு தமிழக அரசு சார்பில் 10 லட்சம், திமுக சார்பில் 10 லட்சம், அதிமுக சார்பில் 10 லட்சம், காங்கிரஸ் சார்பில் 10 லட்சம், தேமுதிக சார்பில் 1 லட்சம் என இதுவரை 50 லட்சம் ரூபாய் அளவிற்கு நிவாரண உதவிகள் கிடைத்துள்ளன.

ஆனால் இதெல்லாம் போதாது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் உயிரிழந்த சுர்ஜித்தின் குடும்பத்திற்கு 1 கோடி ரூபாயும், அவரது தாய்க்கு அரசு வேலையும் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார்,

இந்த சூழலில்தான் தற்போது திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு உயிரிழந்த சுஜித்தின் குடும்பத்தை சேர்ந்த ஒருவருக்கு அரசு வேலை கொடுக்கவேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வருகிறது..,

அதனை கருத்தில் கொண்டு அவரது தாய்க்கு அரசுவேலை கொடுப்பது பற்றி ஆலோசனை செய்துவருவதாக தெரிவித்தார், தற்போது இதுகுறித்த செய்திகள் வெளியான நிலையில் சமூக வலைத்தளங்களில் இரண்டு வெவ்வேறு கருத்துக்கள் வலுப்பெற்று வருகின்றன,Image result for சுர்ஜித் தாய்

குழந்தை சுர்ஜித்தின் உயிரிழப்பிற்கு சீனாவையும் அமெரிக்காவையும் ஒப்பிட்டு பேசிய யாருமே சுஜித் குடும்பம் செய்ததுபோன்று அங்கு தவறுகள் நடந்திருந்தால் இந்நேரம் என்ன தண்டனை கிடைத்திருக்கும் தெரியுமா என்றும்..,

அரசு வேலையும் அரசாங்க பணமும் கொடுக்கும் அளவிற்கு தற்போது என்ன தேவை வந்துவிட்டது என்றும் இது தமிழகத்தில் தவறான முன்னுதாரனத்தை ஏற்படுத்திவிடும் என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்,

மேலும் அரசாங்கத்தை சேர்ந்தவர்கள் செய்த தவறால் பேனர் விழுந்து உயிரிழந்த சுபஸ்ரீ குடும்பத்திற்கு ஏன் இதுபோன்ற உதவிகள் அரசின் சார்பில் முன்னெடுக்கவில்லை என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர் !Image result for சுர்ஜித் தாய்

ஆனால் மற்றொரு தரப்பினரோ அரசாங்கம் சுர்ஜித் குடும்பத்திற்கு நிச்சயம் அரசு வேலை கொடுக்கவேண்டும் என்றும் அரசின் அலட்சியத்தால் நடந்த உயிரிழப்பு எனவே இழப்பீடு வேண்டும் என்றும் வலியுறுத்திவருகின்றனர்.

எது எப்படியோ தமிழகத்தில் அடுத்த ஆழ்துளை விபத்துகள் ஏற்படாமல் எப்படி தடுப்பது என்று ஆலோசனை செய்வதற்கு பதிலாக பணத்தினை பற்றிய ஆலோசனைதான் அதிகரித்துள்ளது.Image result for சுர்ஜித் தாய்

இருந்தாலும் சுர்ஜித் விவகாரத்தில் இப்படி அக்கறை காட்டும் தமிழக அரசு ஏன் படித்த நல்ல வேலையில் இருந்த சுபஸ்ரீ-யை கண்டு கொள்ளவில்லை காரணம் அதிமுகவின் தப்பு தெள்ளத்தெளிவாக மக்களுக்கு தெரியும் என்பதா என பலர் கூறி வருகின்றனர்.

Leave A Comment

Your email address will not be published. Required fields are marked *