பாஜக-வுக்கு பிரபல கார்ப்பரேட் நிறுவனம் கொட்டி கொடுத்த தேர்தல் நிதி இத்தனை கோடியா.?

தொடர்புடைய படம்

2018-19 ம் ஆண்டில் பா.ஜ., பெற்ற தேர்தல் நிதியில் 75 சதவீதம் டாடா குழுமத்திடம் இருந்து பெறப்பட்டது என தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ள புள்ளிவிபரத்தின் மூலம் தெரிய வந்துள்ளது.

அரசியல் கட்சிகள் ஆண்டுதோறும் பெரும் நிதி தொடர்பான விபரத்தை தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ளது. இதில், 2018-19 ம் ஆண்டில் பா.ஜ.,வின் தேர்தல் அறக்கட்டளைக்கு இந்திய கார்ப்பரேட் நிறுவனங்கள் ரூ.472 கோடியை நிதியாக அளித்துள்ளன.

டாடா குழுமம் க்கான பட முடிவு

இதில் 75 சதவீதம், அதாவது ரூ.356 கோடியை டாடா குழுமம் வழங்கி உள்ளது. அதே சமயம் காங்.,ன் 4 தேர்தல் அறக்கட்டளைகள் மூலம் அக்கட்சி பெற்ற தேர்தல் நிதி ரூ.99 கோடி. இதில் ரூ.55.6 கோடி (56 சதவீதம்) டாடா குழுமத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் பி.இ.டி (progressive electoral trust) மூலம் வழங்கப்பட்டுள்ளது.

பாஜக தேர்தல் க்கான பட முடிவு

கார்ப்பரேட் மற்றும் தனி நபர்கள் மூலம் ரூ.20,000 க்கு மேல் பா.ஜ., பெற்ற மொத்த தேர்தல் நிதி ரூ.741.98 கோடி. இது 2017-18 ஆண்டு பெற்ற ரூ.437.69 கோடியை விட 69.5 சதவீதம் அதிகம். 2017-18 ம் ஆண்டில் காங்., பெற்ற மொத்த நிதி ரூ.26.66 கோடியாக இருந்து, 2018-19 ல் ரூ.146.8 கோடியாக அதிகரித்துள்ளது. 2017 – 18 ல் திரிணாமுல் காங்.,க்கு தேர்தல் நிதி அளிக்காத டாடா குழுமம், 2018-19 ல் ரூ.43 கோடி அளித்துள்ளது.

திரிணாமுல் காங்கிரஸ் க்கான பட முடிவு

அதே சமயம் 2017-18 ல் பா.ஜ., வுக்கு ரூ.154 கோடி நிதி அளித்த பார்தி ஏர்டெல் குழுமம், கடந்த நிதியாண்டில் ரூ.67.25 கோடி மட்டுமே அளித்துள்ளது. ஆனால் காங்.,க்கு இந்த நிறுவனம் அளித்துள்ள நிதி ரூ.10 கோடியிலிருந்து ரூ.39 கோடியாக அதிகரித்துள்ளது. இதற்கு மாறாக ஆதித்ய பிர்லா குழுமம், பா.ஜ.,வுக்கு ரூ.28.5 கோடியும், காங்.,க்கு வெறும் ரூ.2 கோடி மட்டும் நிதியாக அளித்துள்ளது.

தொடர்புடைய படம்

“பாளிடிக்ஸ் இஸ் ஏ சீரியஸ் பிசினஸ்” என்று ஒரு சொல்லாடல் உண்டு அது இந்த கணக்குகள் வைத்து பார்த்தால் நிஜம் தான் போல தோன்றுகிறது.

Leave A Comment

Your email address will not be published. Required fields are marked *