ஏர்டெல் நிறுவனத்தின் 5-ப்ரீபெய்ட் திட்டங்கள் வழங்கும் தரமான சலுகைகள்.! என்னென்ன?

Image result for airtel

ஏர்டெல் நிறுவனம் தொடர்ந்து ஜியோ நிறுவனத்திற்கு போட்டியாக பல்வேறு புதிய புதிய திட்டங்களை அறிவித்த வண்ணம் உள்ளது என்றுதான் கூறவேண்டும். மேலும் ஜியோ நிறுவனம் குரல் அழைப்புகளுக்கு கட்டணம் என்ற நடவடிக்கையை கொண்டுவந்தும் ஏர்டெல் நிறுவனம் அப்படி அறிவிக்கவில்லை.

Image result for airtel

இன்று வரை ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு குரல் அழைப்புகளுக்கு கட்டணம் வசூல் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஏர்டெல் நிறுவனத்தின் 5-ப்ரீபெய்ட் திட்டங்களின் தரமான நன்மைகள் என்னவென்று பார்ப்போம் வாங்க..

ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.249-ப்ரீபெய்ட் திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா, எந்தவொரு நெட்வொர்க்குக்கும் வரம்பற்ற அழைப்புகள் கிடைக்கும், பின்பு தினசரி 100எஸ்எம்ஸ் உள்ளிட்ட சலுகைகள் 28நாட்கள் வழங்கப்படுகிறது. பின்பு இந்த ப்ரீபெய்ட் திட்டத்தின் மூலம் 4லட்சம் காப்பீட்டைப் பெறும் வாய்ப்பும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Image result for airtel

ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.299-ப்ரீபெய்ட் திட்டத்தில் எந்தவொரு நெட்வொர்க்குக்கும் வரம்பற்ற அழைப்புகள் கிடைக்கும், பின்பு தினசரி 2.5ஜிபி
டேட்டா, 100எஸ்எம்எஸ உள்ளிட்ட சலுகைகள் 28நாட்கள் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இலவச ஏர்டெல் டிவி பிரீமியம் சந்தா, இலவச அமேசான் ப்ரைம் மெம்பர்சிப் போன்ற சலுகைகளும் கிடைக்கும் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.

Image result for airtel

ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.349-ப்ரீபெய்ட் திட்டத்தில் எந்தவொரு நெட்வொர்க்குக்கும் வரம்பற்ற அழைப்புகள் கிடைக்கும், பின்பு தினசரி 3ஜிபி டேட்டா, 100எஸ்எம்எஸ் உள்ளிட்ட சலுகைகள் 28நாட்களுக்கு வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் வழக்கமான ஏர்டெல் டிவி பிரீமியம் சந்தா இந்த திட்டத்திலும் கிடைக்கிறது.

ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.449-ப்ரீபெய்ட் திட்டத்தில் எந்தவொரு நெட்வொர்க்குக்கும் வரம்பற்ற அழைப்புகள் கிடைக்கும், பின்பு தினசரி 2ஜிபி டேட்டா, 100எஸ்எம்எஸ் உள்ளிட்ட சலுகைகள் 82நாட்களுக்கு வழங்கப்படுகிறது. ஏர்டெல் நிறுவனத்தின் இந்த திட்டம் பல்வேறு மக்கள் பயன்படுத்துகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related image

ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.1699-ப்ரீபெய்ட் திட்டம் ஆனது வருடாந்திர ப்ரீபெய்ட் திட்டம் ஆகும். இந்த திட்டத்தில் ஒரு நாளைக்கு 1.4ஜிபி டேட்டா, 100எஸ்எம்எஸ் எந்தவொரு நெட்வொர்க்குக்கும் வரம்பற்ற அழைப்புகள் உள்ளிட்ட சலுகைகள் 365நாட்கள் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Comment

Your email address will not be published. Required fields are marked *