இன்ஸ்டாகிராமில் வரும் ஆதிரடியான அப்டேட்.. ஆனால் பதற வேண்டியது இல்லை காரணம்.?

இன்ஸ்டாகிராம் க்கான பட முடிவு

இன்ஸ்டாகிராம் செயலி இளைஞர்கள் அதிகம் பயன்படுத்தும் சமூக வலைதளங்களில் ஒன்று. இந்த செயலியில் சமீப காலமாக பல்வேறு அப்டேட்கள் செய்யப்பட்டு வருகிறது, அவை அனைத்துமே அதிரடியான அப்டேட்கள் தான்.

சமீபத்தில் இந்த செயலியில், நாம் பின்தொடரும் நபர்கள் எதை எல்லாம் பார்க்கிறார்கள் எதில் எல்லாம் லைக்ஸ் இட்டிருக்கிறார்கள் என்பதை பார்க்க ஒரு அமைப்பு இருந்தது. அந்த அமைப்பை முற்றிலுமாக நீக்கி இன்ஸ்டாகிராம் அறிவித்தது.

இன்ஸ்டாகிராம் க்கான பட முடிவு

அதற்கான காரணமா, அதிகப்படியான மக்கள் தங்கள் பின் தொடரும் நபர் என்ன செய்கிறார் என்பதை தெரிந்துகொள்வதிலேயே அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள் இந்த மன போக்கு தவறாக தோன்றியதால் அந்த அமைப்பை நீக்கிவிட்டோம் என்று தெரிவிக்கப்பட்டது.

இதை தொடர்ந்து தற்போது இந்த செயலியில் ஒவ்வோரு புகைப்படத்திற்கும் கீழ் தெரியும் லைக்குகளின் எண்ணிக்கையை நீக்க உள்ளதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இன்ஸ்டாகிராம் க்கான பட முடிவு

இது பயனர்களின் மனநிலையை வெகுவாக பாதிப்பதாக கருதுவதாகல் அப்படி செய்யதாக அறிவித்துள்ளது. ஏற்கனவே இந்த அப்டேட் ஆஸ்திரேலியா, இத்தாலி என பல பகுதிகளில் உள்ள மக்களுக்கு கொடுக்கப்பட்டுவிட்டது.

இந்நிலையில் இது தற்போது அமெரிக்காவில் நடைமுறைபடுத்தப்பட உள்ளது. வெகு விரைவில் இது இந்தியாவுக்கும் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது

 

instagram hiding likes

 

Leave A Comment

Your email address will not be published. Required fields are marked *