இனி ஆதார் கார்டில் இதை செய்ய முடியாது., ஷாக் கொடுத்த அரசு., ஆடிப்போய் நிற்கும் மக்கள்.!

Image result for aadhaar updation to get costlier uidai to impose 18% gstஆதார் கார்டில் பெயர், பிறந்த தேதி, பாலினம் விவரங்களை மாற்ற புதிய கட்டுப்பாடுகளை இந்திய தனிநபர் அடையாள ஆணையம் வகுத்துள்ளது. அதன் படி இனி ஆதார் கார்டில் பெயர், பிறந்த தேதி, பாலினம் விவரங்களைக் குறிப்பிட்ட முறைகளுக்கு மேல் மாற்ற முடியாது என்று கூறப்படுகிறது. அது பற்றி விளக்கமாக இங்கு பார்க்கலாம்.

ஆதார் கார்டில் எத்தனை முறை பெயரை மாற்ற முடியும்?

இந்திய தனிநபர் அடையாள ஆணையம் விதித்த கட்டுப்பாடுகளின் படி இனி ஆதார் கார்டில் இரண்டு முறை மட்டுமே பெயரை மாற்ற முடியும்.

ஆதார் கார்டில் எத்தனை முறை பிறந்த தேதியை மாற்ற முடியும்?

ஆதார் கார்டில் ஒரு முறை மட்டுமே பிறந்த தேதியை மாற்ற முடியும்.

அதற்கும் முறையான ஆவணங்களைச் சமர்ப்பித்த பிறகு அதிகபட்சம் மூன்று ஆண்டுகள் வித்தியாசம் இருந்தால் மட்டுமே மாற்ற முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே போன்று பாலினமும் ஒரு முறை மட்டுமே மாற்ற முடியும்.

ஒருவேலை இதற்கும் அதிகமான முறையில் ஆதார் கார்டில் பெயர், பிறந்த தேதி, பாலினம் விவரங்களை மாற்ற வேண்டும் என்றால் தபால் உங்கள் அருகில் உள்ள ஆதார் மையங்களில் அதை செய்ய முடியாது.

முறையான ஆவணங்களை, எதற்காக இந்த மாற்றம் என்ற காரணத்துடன் தபால் முறையில் ஆதார் பிராந்திய அலுவலகத்தில் சமர்ப்பித்து,Image result for ஆதார் கார்டு

அந்த காரணம் உண்மையாக இருப்பின் மட்டுமே ஆதார் கார்டில் பெயர், பிறந்த தேதி, பாலினம் விவரங்களை மாற்ற முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பொதுமக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave A Comment

Your email address will not be published. Required fields are marked *