பரபரப்பு: அதிமுக முக்கிய புள்ளி நடு ரோட்டில் வெட்டிக்கொலை., காரணம் இவர்களா.?

Related imageதிமுக அதன் கூட்டணி மற்றும் அதிமுக அதன் கூட்டணி இந்த இரண்டு கட்சிகளில் தான் அடிக்கடி முக்கிய பிரமுகர்கள் கொலை செய்யப்படுகின்றனர். இந்நிலையில் தற்போது விருதுநகர் மாவட்டம் அல்லம்பட்டியைச் பகுதியில் வசித்து வருபவர் சண்முகவேல் ராஜன், இவர் அந்த பகுதியின் அதிமுகவில் மாணவரணி அவைத் தலைவராக பொறுப்பு வகித்து வந்துள்ளார்.

நேற்றிரவு, தனது வீட்டிலிருந்து வெளியே வந்த சண்முகவேல் ராஜனை அவரது வீட்டு வாசலில் வைத்து மர்ம கும்பல் சரமாரியாக வெட்டிக் கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடியது.

தகவலறிந்த சம்பவ இடத்துக்கு வந்த விருதுநகர் கிழக்கு போலீசார், சண்முகவேல் ராஜன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து, வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வந்த காவல்துறையின் முதல்கட்ட விசாரணையில் அல்லம்பட்டியை சேர்ந்த அருண் பாண்டியன் என்பவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெட்டி கொலை செய்யப்பட்டார்.

அதற்கு பழிக்குப்பழியாக சண்முகவேல் ராஜன் கொலை வெட்டி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.Image result for கொலை

மேலும், சண்முகவேல் ராஜனை வெட்டி விட்டு தப்பி ஓடிய கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைத்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  அதிமுக பிரமுகர் வெட்டி கொலை செய்யப்பட்டது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த கொலை தேர்தலுக்காகவும் இருக்கலாம் என்ற கோணத்திலும் பொதுமக்கள் பேசி வருகின்றனர்.Image result for விசாரணை

Leave A Comment

Your email address will not be published. Required fields are marked *