நடிகை தீபிகா படுகோனே பெங்களூருவில் நடந்த தனது நெருங்கிய தோழியின் திருமணத்தின் பின்விளைவுகளை அனுபவிப்பதாக தெரிகிறது. தெர்மோமீட்டர் எமோஜியுடன் அவர் இன்ஸ்டாகிராம் ஸ்டோரில் போட்டிருக்கும் படம் இதனை உறுதிப்படுத்துகிறது.
படத்தில் தீபிகா மிகவும் களைப்படைந்து காணப்படுகிறார். “உங்கள் பெஸ்ட் ஃபிரெண்ட் திருமணத்தில் நிறைய வேடிக்கையான தருணங்களின் போது” என்ற தலைப்பில் அதை வெளியிட்டுள்ளார்.
தீபிகா தனது சகோதரி அனிஷா படுகோனுடன் தனது பெஸ்ட் ஃபிரெண்ட் ஊர்வசி கேஷ்வானியின் திருமணத்தில் கலந்து கொண்டார். அனிஷா சிவப்பு மற்றும் கோல்டன் நிற அனார்கலி உடையை அணிந்திருந்தார். கோல்டன் ஜரி புடவையையும், சோக்கர் நெக்லஸையும் அணிந்திருந்த தீபிகா, தலைமுடியை தூக்கி கொண்டை போட்டிருந்தார்.
திருமணத்தின் ஒரு வீடியோ வெளியாகி, தீபிகா மற்றும் அவரது சகோதரி திருமண சடங்குகளில் கலந்துக் கொண்டதை உறுதிப்படுத்தியது. தீபிகாவின் தோற்றம் அவரது திருமண வரவேற்பை ரசிகர்களுக்கு நினைவூட்டியது. கடந்த ஆண்டு பெங்களூருவில் நடைபெற்ற தீபிகா – ரன்வீர் சிங் திருமண வரவேற்பில், கருப்பு, கோல்டன் ஷெர்வானியில் ரன்வீரும், கோல்டன் நிற பட்டுப்புடவையில் தீபிகாவும் வலம் வந்தனர்.
தீபிகாவின் இன்ஸ்டாகிராம் ஸ்டோரி
இதற்கிடையே தீபிகா மற்றும் ரன்வீர் ஆகியோர் தங்களது முதல் திருமண விழாவை நவம்பர் 14-ஆம் தேதி கொண்டாட உள்ளனர். கடந்தாண்டு இத்தாலியில் சிந்தி மற்றும் கொங்கனி சடங்குகளின்படி இருவரும் திருமணம் செய்துக் கொண்டனர். பின்னர் மும்பை, பெங்களூவில் வரவேற்பு நிகழ்ச்சி நடந்தத்ய் குறிப்பிடத்தக்கது.