சோனியா,ராகுல் பாதுகாப்பில் மாற்றம்

Image result for rahul gandhi and soniA

காங்., தலைவர் சோனியா, அவருடைய மகனும், முன்னாள் தலைவருமான ராகுல், மகளும், கட்சியின் பொதுச் செயலருமான பிரியங்கா ஆகியோருக்கான பாதுகாப்புப் பணியை, சி.ஆர்.பி.எப்., எனப்படும் மத்திய ரிசர்வ் போலீஸ் படை ஏற்றுக்கொண்டுள்ளது.
Image result for rahul gandhi and soniA
காங்.,கைச் சேர்ந்த முன்னாள் பிரதமர் ராஜிவ், 1991ல் கொல்லப்பட்டார். அதைத் தொடர்ந்து, அவருடைய மனைவி சோனியா, ராகுல் மற்றும் பிரியங்காவுக்கு ‘இசட் பிளஸ்’ பாதுகாப்பு அளிக்கப்பட்டது. எஸ்.பி.ஜி., எனப்படும் சிறப்பு பாதுகாப்புப் படையின் கமாண்டோக்கள் பாதுகாப்பு அளித்து வந்தனர்.வி.வி.ஐ.பி.,களுக்கான பாதுகாப்பு குறித்து, மத்திய உள்துறை அவ்வப்போது ஆய்வு செய்கிறது. அதன்படி, சோனியா, ராகுல் மற்றும் பிரியங்காவுக்கு அளிக்கப்பட்டு வந்த எஸ்.பி.ஜி., பாதுகாப்பை விலக்கி கொள்ள முடிவு செய்யப்பட்டது. அதே நேரத்தில், இசட் பிளஸ் பிரிவின் கீழ், சி.ஆர்.பி.எப்., பாதுகாப்பு வழங்கப்படும் என, அறிவிக்கப்பட்டது.
சோனியா,ராகுல் பாதுகாப்பில் மாற்றம்
இவர்களுக்கு, கடந்த, 28 ஆண்டுகளாக வழங்கப்பட்டு வந்த, எஸ்.பி.ஜி., பாதுகாப்பு சமீபத்தில் விலக்கி கொள்ளப்பட்டது. அதைத் தொடர்ந்து, சி.ஆர்.பி.எப்., வீரர்கள் பாதுகாப்பு பணியை, நேற்று ஏற்றுக் கொண்டனர்.

Leave A Comment

Your email address will not be published. Required fields are marked *