ஜிம்முக்கு செல்லும் முன் இதை தெரிஞ்சிக்கிட்டு போங்க, இல்லைனா……..

Related image

ஜிம்முக்கு போனால் உடல் கட்டழகு பெறலாம். உடல் ஃபிட்டா இருக்கும். உயரத்துக்கேற்ற எடையை துல்லியமாக பெற்று விடலாம். இப்படி நினைத்துதான் ஜிம் போகிறேன் என்று பலரும் சொல்லிகொண்டிருக்கிறார்கள்.அதிகப்படியான உடல் எடையைக் குறைக்க விரும்புகிறேன் என்று சொல்பவர்களும் அதிகளவில் உண்டு.

ஆனால் ஒவ்வொரு விதமான தேவைக்கும் ஏற்ப பயிற்சிகளும் வேறுபடும். அதை உரிய முறையில் கற்றுத்தரவே அனுபவ மிக்க பயிற்சியாளர்கள் இருக்கிறார்கள். அனுபவமிக்க இவர்களின் வழிகாட்டுதலின் நாம் பயிற்சி செய்யும் போது பலனும் இருக்கும்.

அதற்கேற்ப நகரங்களைத் தாண்டி கிராமங்களிலும் ஜிம் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. ஆர்வக்கோளாறில் அதிக ளவில் ஜிம்முக்கு செல்பவர்கள் சிலர் போன வேகத்திலேயே திரும்பி விடுவதும் உண்டு,..

Related image
முதல் முறை ஜிம்முக்கு போக நினைக்கும் போதே அதற்குரிய கட்டுப்பாடுகளை தெரிந்துகொண்டு பயிற்சி செய்தால் நினைத்தது போல் உடலை கட்டுக்குள் கொண்டு வரலாம்.

ஆனால் சரியான ஆலோசகர் உதவியின்றி சுயமாக ஜிம்முக்கு போகும் பலரும் எதற்கு பயிற்சி செய்கிறோம். எதனால் செய்கிறோம்.. எதையெல்லாம் செய்யக்கூடாது என்பதை அறிந்து கொள்ளாமல் திணறுவதும் உண்டு.

நீங்கள் ஜிம்முக்கு போக விரும்பினால் முதலில் இதையெல்லாம் தெரிந்து கொள்ளுங்கள்.
Related image
ஜிம் அவசியமா
(பாடி பில்டிங் செய்பவர்கள் தனி ) உடல் பருமனால் உடல் எடையைக் குறைக்க விரும்புகிறீர்களா? உடலை அழகாக கட் டுக் கோப்பாக வைக்க விரும்புகிறீர்களா? உடல் தசைகளுக்கு வேலை கொடுத்து ஆரோக்கியமாக இருக்க விரும்புகிறீர் களா என்பதை முடிவு செய்துகொள்ளுங்கள்.

இவை எதுவும் இல்லாமல் எல்லோரும் ஜிம்முக்கு போகிறார்கள் அதனால் நானும் போகிறேன் என்று நடைபயிற்சி கூட செய் யாதவர்கள் ஜிம்முக்கு போவது என்பது போகாத ஊருக்கு வழி தேடுவது போன்று. அதனால் என்ன காரணத்துக்காக போகி றீர்கள் அதற்கு இந்தப் பயிற்சி சரியானாதா என்பதை அனுபவமிக்க பயிற்சியாளர்களிடம் கேட்டு முதலில் தெளிவுப்படுத் திக் கொள்ளுங்கள்.

தரமான ஜிம்மை தேர்வு செய்யுங்கள்
ஆங்காங்கே ஜிம் கூடங்கள் தொடங்கப்பட்டாலும் தரமான ஜிம்களைத் தேர்வு செய்யுங்கள். பயிற்சி செய்யக்கூடிய கருவிக ளும் பயிற்சி செய்யும் இடமும் பயிற்சி வழங்கக்கூடிய சிறந்த அனுபவமிக்க பயிற்சியாளரும் இணைந்த ஜிம்மைத் தேர்வு செய்வது உங்களுக்கு பாதுகாப்பானது. உடலை கட்டுக்கோப்பாக வைப்பதில் ஆர்வம் வந்தபிறகு ஆரோக்கியமான பயிற்சி யும் அவசியமே.

உடல் குறைபாடு
நீரிழிவு, இரத்த அழுத்தம், சைனஸ், ஆர்த்ரைட்டீஸ் என்று எந்த குறைபாடு இருந்தாலும் அதை ஜிம்மில் உங்களுக்கு பயிற்சி கொடுக்கும் பயிற்சியாளரோடு வெளிப்படையாக பேசி ஆலோசியுங்கள்.

உங்கள் ஆரோக்கியத்தின் அடிப்படையை வைத்து தான் பயிற்சி அளிப்பார் என்பதால் நீங்கள் ஏதேனும் நோய் பாதிப்பில் இருந்தாலும் அதற்கேற்ப பயிற்சி அளிப்பார்.

மாற்றாதீர்கள்
பயிற்சியாளர் சரியில்லை. இடம் சரியில்லை. பயிற்சி கடினமாக இருக்கு என்று அவ்வபோது ஜிம்மை மாற்றகூடாது என்ற உறுதியை வைத்துகொள்ளுங்கள். ஜிம்மில் இருக்கும் கருவிகள் அவற்றை பயிற்சி செய்யும் முறைகள் அவற்றின் பயன்கள் என்று அனைத்தையும் கற்று பயிற்சி செய்வதில் மட்டுமே கவனம் இருக்க வேண்டும்.

வெறும் வயிற்றில் பயிற்சியா
நடைபயிற்சி செய்யும் போது ஒரு தம்ளர் நீர் அருந்திவிட்டு செல்லுங்கள் என்று சொல்வார்கள். கடினமான பயிற்சியான ஜிம் பயிற்சிக்கு செல்லும் போதும் உங்கள் பயிற்சியாளரின் அறிவுரைக்கேற்ப பயிற்சிக்கு முன்பு உணவை எடுத்துக்கொள்வது நல்லது.

Related image

பயிற்சியின் போது
பயிற்சியின் போது உடலுக்கு வார்ம்-அப் அவசியம். குறிப்பாக எந்த உடல் உறுப்புகளுக்காக பயிற்சி செய்ய விரும்புகி றோமோ அதற்கேற்ப தசைகளை பயிற்சி செய்வது முக்கியம்.

நடைபயிற்சி உடற்பயிற்சியை போன்று ஜிம் பயிற்சி என்று சொல்லிவிட முடியாது. பயிற்சி செய்யும் போது அதிகப்படியாக வியர்வை வெளியேறும் அத்தருணம் தாகமும் அதிகமாக இருக்கும். கையில் இருக்கும் தண்ணீரை வேகமாக குடிக்காமல் சிப் போன்று உறிஞ்சு குடியுங்கள். வியர்க்க விறுவிறுக்க வேகமாக செய்த பயிற்சியால் மூச்சு வாங்கும் போது அதே வேகத்துடன் தண்ணீர் குடிப்பது ஹார்ட் அட்டாக் பிரச்சனையைக் கொண்டு வரவும் வாய்ப்புண்டு.

பலன் எப்போது தெரியும்
ஜிம்முக்கு போன முதல் வாரத்திலேயே கட்டழகை கண்ணாடியில் தேடவேண்டாம். பயிற்சிக்கு தயாராக தசைகள் வலுப் பிடிக்கவே ஒரு மாதம் வரை ஆகலாம். அதே நேரம் அதிகம் பயிற்சி செய்தால் உடனடியாக பலன் கிட்டும் என்று நினைத்து அதிக நேரம் பயிற்சியில் ஈடுபட்டாலும் சுளுக்கு,. வலி, வீக்கம், தசைப்பிடிப்பு என்று ஏதாவது ஒன்றை இழுத்து விட்டுகொள்வீர்கள்.

பயிற்சியாளரின் கட்டுப்பாட்டில் அவருடைய கண்காணிப்பில் பயிற்சி செய்வது உங்கள் உடல் நலனில் பாதிப்பை ஏற்ப டுத்தாமல் சுகமான ஜிம் பயிற்சியாகவே உங்களுக்கு இருக்கும்.

Leave A Comment

Your email address will not be published. Required fields are marked *