ஜாகிங்/ ரன்னிங் போகுபவர்கள் இதை முக்கியமாக தெரிந்து வைத்து கொள்ளுங்கள் !!

Image result for jogging

ரன்னிங் மற்றும் ஜாகிங் என்பவை வாக்கிங் என்னும் நடைப்பயிற்சியை விட சற்று வித்தியாசமானது. உடல் இயக்கத்தை சீர்ப்படுத்தி, தேவையற்ற கழிவுகளை வெளியேற்றி, அதிக அளவிலான கலோரிகளை எரிக்கச் செய்யும். அப்படி ரன்னிங் போக நீங்களும் திட்டமிட்டிருந்தால் கீழ்வரும் விஷயங்களை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.

எவ்வளவு வேகம்?

ரன்னிங் எப்படி தொடங்கலாம் என்று யோசிக்கும்போதே உங்கள் மூளைக்குள் ஆயிரம்
கேள்விகள் எழும்பும்? எவ்வளவு வேகமாக நான் ஓட வேண்டும்? முதல்நாள் ஓடி முடித்தவுடன் உங்கள் மனநிலை எப்படி இருக்கும் என்றெல்லாம் யோசித்துப் பார்ப்போம்.
நான் என்ன சாப்பிட வேண்டும்? என்று யோசிப்போம். முதலில் ஓரளவுக்கு பதட்டம்
ஏற்படத்தான் செய்யும். ஆனால் ரிலாக்ஸ் ஆகுங்கள். ரன்னிங் என்பது வயது, ஃபிட்னெஸ்
போன்ற எதையும் கருத்தில் கொள்ளாமல் யார் வேண்டுமானாலும் முயற்சி செய்து
பார்க்கக்கூடிய ஒரு சிறந்த செயல்பாடு ஆகும்.

எப்படி தொடங்க வேண்டும்?

முதலில், உங்கள் அட்டவணையை திட்டமிடுங்கள், இதனால் நீங்கள் உங்கள் புதிய
ரன்னிங் பழக்கத்திற்கு நேரம் ஒதுக்குவதை உறுதி செய்து கொள்ளலாம். ஒரு நாளில்
வெறும் 30 நிமிடங்கள், வாரத்திற்கு மூன்று முதல் ஐந்து முறை ரன்னிங் மேற்கொண்டாலே போதும். நீங்கள் ஃபிட்னெஸாக இருக்கலாம்.

நீங்கள் ரன்னிங் செய்யத் தொடங்கும் போது, முதல்நாளே ஆர்வத்தல் நீண்ட தூரம் செல்லவோ அல்லது அதிவேகமாக ஓடவோ திட்டமிட வேண்டாம். இப்படி செய்வது தான் ரன்னர்களுக்கு காயம் ஏற்படுவதற்கான முதல் காரணமாகும்.

Image result for jogging

எவ்வளவு நேரம்?

முதலில் 20 நிமிடத்தில் தொடங்குங்கள். வாரத்திற்கு மூன்று முறை என ரன்னிங்கை தொடங்குங்கள். படிப்படியாக நீங்கள் ஓடும் நேரத்தையும் நீங்கள் ஓடும் நாட்களையும் அதிகரியுங்கள், ஆனால் உங்கள் தற்போதைய பயிற்சி அளவில் நீங்கள் சௌகரியமாக உணரும் வரை அதிகரிக்க வேண்டாம். 20 நிமிடங்கள் என்பது உங்களுக்கு அதிகப்படியானதாக இருந்தால் நடந்த படி இடைவேளைகளை எடுத்துக் கொள்ள தயங்க வேண்டாம்.

ஒருவேளை நீங்கள் 20 நிமிடங்களை முடிக்கும் வரை 4 நிமிடங்கள் ஓடுவதும் 1 நிமிடம் நடப்பதுமாக பயிற்சியை தொடங்கலாம். உடல் வலிமை கூடிய பிறகு நடக்கும் இடைவேளைகளை நீக்கி விடலாம்.

புதிதாக தொடங்க

நீங்கள் புதிதாக ரன்னிங்கை தொடங்கியவர் என்றால் எத்தனை மைல்கள் நீங்கள்
ஓடுகிறீர்கள் என்பதைப் பற்றி கவலைப்பட வேண்டாம். அதற்கு பதிலாக எத்தனை
நிமிடங்கள் ஓடுகிறீர்கள் என்பதன் மீது கவனம் செலுத்துங்கள். படிப்படியாக அதே அளவு
நேரத்தில் நீங்கள் அதிகப்படியான தூரம் ஓடத் தொடங்குவீர்கள். அப்போது தான் நீங்கள்
பயிற்சி நேரத்தை அதிகரிக்க வேண்டும்.

எந்த மாதிரியான சாதனங்கள் தேவை?

ரன்னிங் செல்வதற்கு பெரிதாக எதுவும் உபகரணங்கள் தேவைப்படுவது இல்லை. ஆனால் ரன்னர்கள் செய்ய வேண்டிய மிக முக்கியமான முதலீடு என்னவென்றால் ஒரு ஜோடி நல்ல ரன்னிங் ஷூக்கள் ஆகும்.

Image result for jogging

என்ன ஷூ வாங்கலாம்?

கிராஸ் ட்ரெய்னிங், வாக்கிங் அல்லது டென்னிஸ் ஷூக்கள் அல்ல. அதற்கான பிரத்தியேகமான கடைகளில் சிறந்த ரன்னிங் ஷூக்களை வாங்கலாம்.

எதையெல்லாம் கவனிக்க வேண்டும்?

உங்கள் கால்கள் தரையில் பதியும் விதம் சரியாக இருக்கிறதா என்பதை உறுதி செய்ய உங்களை ஓடச் சொல்லி பலரும் உற்று கவனிப்பார்கள். பெண்களாக இருந்தால் மேலும் நீங்கள் நல்ல தரமான ஃபிட்டான ஸ்போர்ட்ஸ் பிராவை அணிய வேண்டும். ஆண்களாக இருந்தால் நல்ல பனியன் அல்லது மென்மையான டீசர்ட் வாங்கிக் கொள்ளுங்கள்.

தொழில்நுட்ப வசதி

தற்போது எல்லா காரியங்களுக்கு தொழில்நுட்பக் கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டு விட்டன. தற்போது இதற்கெனவே டிஜிட்டல் ஸ்போர்ட்ஸ் வாட்ச்கள் மற்றும் போன் ஆப் வந்துவிட்டது. அதை கூட நீங்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள். இதறடகென செலவு செய்யத் தேவையில்லை. இலவச ரன்னிங் ஆப் கூட உங்களுக்கு உதவும். நீங்கள் ரன்னிங்கில் முன்னேற்றம் அடையும்போது மற்றும் புதிய இலக்குகளை அமைத்துக் கொள்ளும்போது, சரியான அளவில் உங்கள் முயற்சியை செய்து கொண்டு இருக்கிறீர்களா என்பதை உறுதி செய்ய ஒரு ஹார்ட் ரேட் மானிட்டரை வைத்திருப்பது நல்லது.

கால் நோகாமல் இருக்க

புதிதாக ரன்னிங்கை முயற்சிப்பவர்களுக்கு ஆரம்பத்தில் உங்கள் கால்கள் புண்ணாகும் வாய்ப்பு இருக்கிறது. ஆனால் அதையே நீங்கள் பழக்கப்படுத்திக் கொள்ளும்போது விரைவில் வலிகள் அகன்றுவிடும். உடலின் எந்தப் பாகத்திலாவது நீங்கள் தீவிரமான வலியை உணர்ந்தால், காயங்கள் ஏற்படுவதை தடுக்க சில நாட்களுக்கு ஓடுவதை நிறுத்தி கால்கள் குணமடைய நேரம் கொடுங்கள்.

பயிற்சியை அதிகப்படியாக மேற்கொள்ளும் போதும் அல்லது பொருந்தாத ஷூக்களை
அணியும் போதும் பொதுவாக ஏற்படக்கூடிய காயம் முழங்காலை சுற்றி ஏற்படும்
வலியாகும். சோர்வடைவதற்கும் காயம் ஏற்படுவதற்கும் இடையே உள்ள
வித்தியாசத்தைப் பற்றி விழிப்புணர்வுடன் இருங்கள். மேலும் அதிகப்படியான
பயிற்சியினால் காயங்கள் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

Image result for jogging
எவ்வளவு வேகமாக ஓட வேண்டும்?

ஆரம்பகாலத்தில் ரன்னிங் நிச்சயமாக சவாலான விஷயமாகவே இருக்கும்.
மூச்சிரைக்கும். அது காலப்போக்கில் குறைந்துவிடும். ஓடிக்கொண்டே உங்களால் பேச முடிந்தால் நீங்கள் நல்ல வேகத்தில் இருக்கிறீர்கள் என்று அர்த்தம். வாரத்தில் ஒன்று அல்லது இருமுறை குறைவான தொலைவு ரன்னிங் செல்லுங்கள். ஆனால் பேசுவதற்கு கடினமான வகையில் அதை அதி வேகத்தில் முடியுங்கள். இது உங்கள் ஃபிட்னெஸ் லெவலை அதிகரிப்பதோடு இதயத்தின் வலிமையையும் அதிகரிக்கும்.

டிரெட்மில்லில் பயிற்சி செய்யலாமா?

இரண்டிலும் நன்மைகள் உண்டு. வானிலை சாதகமாக இல்லாத போது டிரெட்மில்கள்
மிகச்சரியான மாற்று வழியாகும். மேலும் தூரங்களையும் வேகத்தையும் எளிதாக
அடைய இது உதவும்.

மலைகளை தவிர்க்க வேண்டுமா?

மலைகளில் ரன்னிங் போவது உங்கள் கால்களின் உறுதியை அதிகரிக்கவும் கலோரிகளை எரிக்கவும் சிறந்த வழியாகும். நீங்கள் மலை மீது ரன்னிங் போகும்போது உங்கள் காலடிகளை அருகருகே வைத்து கைகளை முன்னோக்கி வீசியபடி ஏற வேண்டும். மலை இறங்கும் போது லேசாக முன்புறம் சாய்ந்து நீங்கள் உதவினால் போதும் புவிஈர்ப்பு
விசையினால் தானாக இறங்கிவிடுவீர்கள்.

பக்கவாட்டு தசைப்பிடிப்பிலிருந்து விடுபடுவது எப்படி?

தசைப்பிடிப்புகள் பொதுவானது. அது உங்கள் தசைகளில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால்
ஏற்படுகிறது. அதை நிறுத்த நீளமாகவும் பலமாகவும் மூச்சை இழுத்துவிடும்படியும்
அல்லது மூச்சை வெளிவிடும்போது இடுப்பை நோக்கி குனியும்படியும் செய்யலாம். தசைப்பிடிப்பு நிற்கும் வரை உங்கள் ஓட்டத்தின் வேகத்தை நீங்கள் சற்று குறைக்கலாம். தசைப்பிடிப்பு பிரச்சனை தொடர்ந்து ஏற்பட்டால் உடற்பயிற்சிக்கு முன் உடனடியாக திட உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்கவும். மேலும்
உங்கள் உடலில் போதிய நீர்ச்சத்து இருப்பதை உறுதி செய்துக் கொள்ளவும்.

Related image

என்ன சாப்பிட வேண்டும்?

அதிக தாங்குதிறன் தேவைப்படும் மாராத்தான் போன்ற நிகழ்வுகளுக்காக
பயிற்சி எடுத்தாலொழிய உண்மையில் உங்கள் ஒட்டுமொத்த டயட்டையும் மாற்றத்
தேவையில்லை. ஆனால் கார்போஹைட்ரேட் உணவுகளுக்கு தடை சொல்லாமல் சாப்பிட
வேண்டியது அவசியமாகும். உங்கள் தசைகளைக் கட்டுமஸ்தாக வைத்துக்கொள்ள
ஏராளமான புரோட்டீன் உள்ள உணவுகளை சாப்பிட வேண்டும். புத்திசாலித்தனமான,
ஆரோக்கியமான, அதிக எனர்ஜி கொண்ட உணவுகளை சாப்பிடுங்கள்.

எடையை குறைக்க விரும்புபவர்கள் கொழுப்பு, கார்போஹைட்ரேட்டுகள், புரோட்டீன்
சரிவிகிதமாக இருக்கும் உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். அதிகப்படியான
கார்போஹைட்ரேட் உணவுகளையும் அதற்கு சமமான அளவில் கொழுப்பு மற்றும்
புரோட்டீனையும் எடுத்துக்கொள்ள வேண்டும்.

உடற்பயிற்சி செய்வதற்கு முன்பும் பின்பும் உணவில் ஊட்டச்சத்து என்கிற விஷயத்துக்கு
வந்தால் பொதுவாக நீங்கள் காலை வேளைகளில் வெறும் வயிற்றுடன் அல்லது சிறிதளவு
ஸ்நாக்ஸை மட்டும் எடுத்துக்கொண்டு ரன்னிங் போக விரும்புவீர்கள். ஓடி முடித்த பிறகு
ஸ்நாக்ஸா அல்லது முழு உணவை எடுத்துக்கொள்வதா என நீங்கள் முடிவெடுக்கும்போது
மேலே கூறிய விஷயங்களை கருத்தில் கொள்ள வேண்டும்.

ரன்னிங்கால் எடையை குறைக்க முடியுமா?

எடையை குறைப்பது உங்கள் நோக்கமாக இருந்தால் அதற்கு ரன்னிங் ஒரு அற்புதமான
வழியாகும். ஆனால் அதனால் மேஜிக் எதுவும் நடந்துவிடாது. ஏதேனும் உடற்பயிற்சி
திட்டத்துடன் ரன்னிங்கையும் மேற்கொண்டால் அது அதிக கலோரிகளை எரிக்க உதவும்.
இதனால் உங்கள் எடை குறையும். உடலை ஆரோக்கியமாகவும் ஃபிட்டாகவும் வைத்துக் கொள்ள ஏராளமான விஷயங்களும் ரன்னிங்கில் இருக்கின்றன.

Leave A Comment

Your email address will not be published. Required fields are marked *