2வது கணவர் நச்சுக்கிருமி மாதிரி.. அதனால் தான் வெட்டி எறிந்துவிட்டேன்.. பிரபல நடிகை!

Image result for shweta tiwari

தனது இரண்டாவது கணவரை பிரிந்தது என்பது உடலை தாக்கிய நச்சுக்கிருமியை வெட்டி எறிந்தது போன்றது தான் என நடிகை ஸ்வேதா திவாரி தெரிவித்துள்ளார்.

மும்பை: தனது இரண்டாவது கணவரை பிரிந்தது குறித்து நடிகை ஸ்வேதா திவாரி முதல் முறையாக மனம் திறந்து பேசியுள்ளார்.

Image result for shweta tiwari

நாகினி உள்ளிட்ட தொலைக்காட்சி தொடர்களில் நடித்து புகழ்பெற்றவர் இந்தி நடிகை ஸ்வேதா திவாரி. இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்றுள்ளார்.

நடிகை ஸ்வேதா திவாரி முதலில் நடிகர் ராஜா சவுத்திரியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு பாலக் எனும் மகள் இருக்கிறார். திருமணமான ஒன்பது வருடங்களில் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர்.

Image result for shweta tiwari

இதையடுத்து நடிகர் அபினவ் கோலியை காதலித்து கடந்த 2013ம் ஆண்டு மறுமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது.

ஆனால் ஸ்வேதாவின் இரண்டாவது திருமணமும் தோல்வியில் தான் முடிந்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு, அபினவ் கோலி தினமும் மதுபோதையில் தன்னை அடித்து துன்புறுத்துவதாக ஸ்வேதா போலீசில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் அபினவை போலீசார் கைது செய்தனர்.

Image result for shweta tiwari

இதையடுத்து அபினவை பிரிந்து தனது குழந்தைகளுடன் தனியாக வாழ்ந்து வருகிறார். தற்போது மீண்டும் அவர் தொலைக்காட்சி தொடர்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார்.

இந்நிலையில் ஸ்வேதா தனது இரண்டாவது திருமணமும் தோல்வியில் முடிந்தது குறித்து ஆங்கில நாளிதழ் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார். அதில், “இப்போது நான் உண்மையிலேயே மகிழ்ச்சியாக இருக்கிறேன். என்னை ஒரு நச்சுக்கிருமி தாக்கியிருந்தது. அந்த கிருமி என்னை கடுமையாக துன்புறுத்தி வந்தது. அதை நான் அறுவை சிகிச்சை செய்து வெட்டி எறிந்துவிட்டேன்”, என ஸ்வேதா கூறியுள்ளார்.

Related image

மேலும், “அதெப்படி இரண்டாவது திருமணமும் பிரச்சினையாகும் என பலரும் என்னை பற்றி பேசுகிறார்கள். அவர்களிடம் நான் ஒன்று கேட்க ஆசைப்படுகிறேன். 2வது திருமணம் ஏன் பிரச்சினையாகக்கூடாது. அதை வெளியில் சொல்லி, அந்த பிரச்சினையில் இருந்து வெளியில் வர எனக்கு தைரியம் இருக்கிறது.

Image result for shweta tiwari

ஆனால் இங்கு பல பெண்கள் தங்கள் பிரச்சினையை வெளியில் சொல்ல தைரியம் இல்லாமல் பயந்துக்கொண்டு, எல்லா துன்பங்களையும் பொறுத்து போகிறார்கள். ,இங்கு திருமணமான எத்தனையோ பேர், யாருக்கும் தெரியாமல் வெளியில் பாஸ் பிரெண்ட், கேர்ள் பிரெண்ட் வைத்திருக்கிறார்கள். ஆனால் நான் அப்படி செய்யவில்லையே.

Image result for shweta tiwari

என்னை விமர்சிப்பவர்களை பற்றியும், கேவலாக எழுதுபவர்களை பற்றியும் நான் கவலைப்பட போவதில்லை. நான் எனது குடும்பத்துக்காக, குழந்தைகளுக்காக உழைத்துக்கொண்டிருக்கிறேன். எனவே வேறு எதுவும் எனக்கு முக்கியமில்லை”, என ஸ்வேதா திவாரி கூறியுள்ளார்.

Leave A Comment

Your email address will not be published. Required fields are marked *