இது பொய் இல்ல நிஜமாவே இப்படி செஞ்சா உங்க தோற்றம் இளமையா இருக்கும்.!

தொடர்புடைய படம்

நம் உடம்பில் ஆக்ஸிடேஷன் என்று சொல்லக்கூடிய செயல்திறன் உடல்லின் வயது மிக வேகமாக அதிகரிக்கிறது. இதனை தடுக்க கூடிய சக்தி ஆன்டி அக்சிடண்ட்ஸ்களுக்கு உண்டு. எனவே நீங்கள் அதிக அளவில் ஆன்டி ஆக்சைண்ட்ஸ்ஸ் நிறைந்த உணவுகளை உட்கொண்டு வருவதன் மூலம் வயதாவதை தள்ளி போடலாம்.

கீரை, புரோக்கோலி, தக்காளி, தர்பூசணி, திராட்சை, கொய்யா, கொண்டைக்கடலை, ஓட்ஸ், சிவப்பரிசி இவையெல்லாம் சருமம் காக்கும் உணவுப் பொருள்கள்.

தக்காளி க்கான பட முடிவு

திரவ உணவுகளை அதிகம் உட்கொண்டால், உடலிலுள்ள நச்சுகள் வெளியேறிவிடும். நிலக்கடலையில் கால்சியம், பொட்டாசியம், வைட்டமின் பி 6, ஆன்டி ஆக்சிடிண்ட்ஸ், ப்ரோடீன், பொட்டாசியம், நல்ல கொழுப்பு போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. தினமும் ஒரு கைப்பிடி அளவு நிலக்கடலையை சாப்பிட்டு வந்தால் எப்போதும் இளமையாகவும், துடிப்பாகவும் வாழலாம்.

நில கடலை க்கான பட முடிவு

பாதாம் பருப்பிலும் வால்நட்டிலும் வைட்டமின் ஈ நிறைந்துள்ளது; இது, சருமத்தைப் பாதுகாக்கும். கிரீன் டீ, தயிர், தேன் ஆகியவையும் சருமத்துக்கு நல்லவை.

உடல் ஆரோக்கியத்தில் க்ரீன் டீ மிகவும் முக்கிய பண்பினை வகுக்கின்றது. இதில் உள்ள ஆன்டி ஆக்சைண்ட்ஸ், பிரீ ரேடிஸ் என்று சொல்லக்கூடிய செல்லின் அழிவு தடுக்க எப்போதும் இளமையாக வைத்திருக்க உதவும்.

கிரீன் டீ க்கான பட முடிவு

முதுமையைத் தள்ளிப்போட நினைப்பவர்கள் முக்கியமாகத் தவிர்க்கவேண்டியது ஆல்கஹால். சர்க்கரையும் கார்போஹைட்ரேட்டும் நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிடுவது சருமத்திலிருக்கும் கொலாஜனை பாதித்து, சுருக்கத்தை ஏற்படுத்திவிடும். இவற்றுக்கு பதிலாகப் பழங்களையும் காய்கறிகளையும் சேர்த்துக்கொள்வது சருமத்துக்கு நல்லது.

நெல்லிக்கனியில் மிக அதிக அளவு அதிக வைட்டமின் சி உள்ளது. மேலும் இதில் ஆன்டி ஆக்ச்டிண்ட்ஸ் மற்றும் பயோட்டின் நிறைந்துள்ளது. தினமும் ஒரு நெல்லிக்கனியை உட்கொண்டு வரும் எப்பொழுதும் இளமையாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கலாம்.

நெல்லிக்காய் க்கான பட முடிவு

Leave A Comment

Your email address will not be published. Required fields are marked *