ரிலையான்ஸ் ஜியோ தெறிக்க விடும் ஆஃபர்கள்.. உங்களுக்கு தேவையான அனைத்தும் மிக குறைந்த விலையில்..

ஜியோ ஆஃபர் க்கான பட முடிவு

முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அதன் ரூ.149 ப்ரீபெய்ட் திட்டத்தில் திருத்தம் ஒன்றை நிகழ்த்தியுள்ளது. இந்த திருத்தத்தின் வழியாக சமீபத்தில் அறிமுகமான ஜியோவின் ஆல்-இன்-ஒன் திட்டங்களோடு ரூ.149 திட்டமும் இணைந்துள்ளது.

திருத்தப்பட்ட ரூ. 149 ரிலையன்ஸ் ஜியோ ப்ரீபெய்ட் திட்டமானது வரம்பற்ற ஜியோ டூ ஜியோ அழைப்புகள், 300 நிமிட நான்-ஜியோ அழைப்புகள், ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ்கள், ஒரு நாளைக்கு 1.5 ஜிபி அளவிலான டேட்டா போன்ற நன்மைகளை முன்னரே குறிப்பிட்டபடி 24 நாட்கள் செல்லுபடியாகும் வண்ணம் வழங்குகிறது.

தொடர்புடைய படம்

தவிர இந்த ரூ,149 ஆனது ஜியோ ஆப்ஸ் சந்தாவையும் வழங்குகிறது. இந்த சமீபத்தியதிருத்தமானது ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் தின் இணையதளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது.

சமீபத்தில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், ஜியோ அல்லாத மற்ற நெட்வொர்க்குகள் உடனான அழைப்புகளுக்கு நிமிடத்திற்கு 6 பைசா என்கிற கட்டணத்தை வசூலிப்பதாக அறிவித்ததும், அதன் பின்னர் இலவச நான்-ஜியோ அழைப்புகளை வழங்கும் ஆல்-இன்-ஒன் திட்டங்களை அறிமுகம் செய்ததும் குறிப்பிடத்தக்கது. இருப்பினும், ஜியோவின் இந்த ஐ.யூ.சி கட்டணம் ஆனது இந்தாண்டு டிசம்பர் வரை மட்டுமே தொடரும் என்று கூறப்படுகிறது.

ஜியோ ஆஃபர் க்கான பட முடிவு

இது தவிற சமீபத்தில் ஜியோ, ரூ. 222, ரூ. 333, ரூ. 444, மற்றும் ரூ. 555 என்கிற விலைக்கு  ஜியோ ஆல் இன் ஒன் என்ற சிறப்பு ரீச்சார்ஜ் திட்டங்களை அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

Leave A Comment

Your email address will not be published. Required fields are marked *