ஒரே வாரத்தில் கண் கருவளையத்துக்கு குட்பை சொல்லுங்க, இதோ ரகசியம் !

Image result for eye dark circle

அழகான முகத்தில் கவர்ச்சியான கண்களுக்கு கீழ் கருப்பாக இருக்கும் கருவளையம் பலருக்கும் இருக்கும் பிரச்சனையாக உருவெடுக்கிறது. கருவளையம் போக இதையெல்லாம் செய்யுங்கன்னு யார் என்ன சொன்னாலும் செய்து பார்க்கிறோம். அவை மறைவதற்கு பராமரிக்க தனி நேரம் ஒதுக்கி மெனக்கெடவும் செய்கிறோம். ஆனால் வளையம் மறைந்தபாடில்லை என்று புலம்பும் பெண்கள் நீங்களாகவும் இருக்கலாம்.

இன்று இளம்பெண்கள் தாண்டி பதின்ம வயது பெண்களையும் இது பாதிக்கிறது. எதைக் கேட்டாலும் மன அழுத்தம் அத னால் தான் இப்படி ஆகிவிட்டது என்று விளக்கம் கொடுக்கிறோம். இந்த கருவளையத்துக்கு இது மட்டும் காரணமில்லை. உரிய பராமரிப்பு இல்லாததும், உடல் ஆரோக்கிய குறைபாடும் தான் என்கிறார்கள் அழகு மற்றும் சரும பரமாரிப்பு நிபு ணர்கள்.

தூக்கமின்மையால் வரும் கருவளையம் ஓய்வுக்கு பிறகு நிச்சயம் தானாகவே சரியாகிவிடும். இதற்கு பிரத்யேக பராமரிப்பு தேவைப்படாது. ஆனால் கண்ணுக்கு ஓய்வு கொடுக்காமல் மார்க்கெட்டில் இருக்கும் அத்தனை க்ரீம்களையும் போட்டு சரு மத்தை ஒரு வழியாக்கிவிடுபவர்களும் உண்டு. ஆனால் உண்மையில் என்ன பராமரிப்பு செய்தும் போகாத கருவளையத் துக்கு காரணம் ஆரோக்கிய குறைபாடுதான்.

Image result for eye dark circle
இரத்தத்ததில் இரும்புச்சத்து அளவு குறையும் போது இயல்பாகவே கண்களுக்கு கீழ் கருவளையம் உருவாக தொடங்குகி றது. உணவு பழக்கத்தில் இதை ஈடு செய்யாவிட்டால் நாளடைவில் இவை பெரிய அளவில் தீவிரமாகும் போது சரும பராம ரிப்பு நிபுணர்கள் கைதேர்ந்தவர்களாக இருந்தாலும் அவை பயன் தராது என்பதே கசப்பான உண்மை.

கருவளையத்தைப் போக்குவதற்கான நடவடிக்கையில் இறங்கும் போது அதற்குரிய காரணத்தை முதலில் கண்டறியுங்கள்.
இயற்கை முறையில் கருவளையத்தை எளிதாகவே சரிசெய்யலாம். எப்படி என்பதை பார்க்கலாமா?

கண்ணுக்கு தேவை குளிர்ச்சி
எப்போதும் ஓயாத வேலையைக் கண்ணுக்கு கொடுக்கும் போது கண்ணும் கண்களைச் சுற்றியுள்ள பகுதிகளும் களையிழக் கும். முக்கியமாக கணிணித்துறையில் இருப்பவர்களுக்கு கண்களுக்கான முழு ஓய்வு என்பது தூங்கும் போது மட்டும்தான்.
அதனால் கிடைக்கும் இடைவெளியில் கண்களைக் குளிர்ந்த நீரால் கழுவுங்கள். இது கண்களை மட்டுமல்ல கருவளையத் தையும் மெதுவாக போக்கும்.

உருளைக்கிழங்கு
காலங்காலமாக கருவளையத்துக்கு தீர்வு தருவது உருளைக்கிழங்கு தான். ஆனால் இதை தொடர்ந்து பயன்படுத்தினால் தான் பலனையும் உணரமுடியும். ஃப்ரெஷ்ஷான உருளைக்கிழங்கை தோல் சீவி வட்டவிடிவில் வெட்டி கண்ணுக்கு கீழ் கருவளையம் மீது வைத்து 15 நிமிடங்கள் கழித்து அந்த இடத்திலும் கண்ணைச் சுற்றியும் குளிர்ந்த நீரால் கழுவி வரவும்.

உருளைக்கிழங்கு அப்படியே பயன்படுத்துவது சிரமமாக இருந்தால் உருளைக்கிழங்கை சிறுதுண்டுகளாக நறுக்கி பூண்டு இடிக்கும் சிறு உரலில் நீர்விடாமல் நசுக்கினால் அதிலிருந்து சாறு வடியும் அதை எடுத்தும் கண்களைச் சுற்றி தடவலாம்.

அல்லது தோல்சீவிய உருளைக்கிழங்கை மிக்ஸியில் நீர் விடாமல் அரைத்து மைய அரைத்தும் பூசி வரலாம். தொடர்ந்து செய்து வரும்போது நான்கு நாட்களில் கருவளையத்தின் சுவடு மறைவதைப் பார்க்கலாம்.

கற்றாழையும் மஞ்சளும்
கற்றாழை சருமத்துக்கு பளப்பளப்பு, நிறம் கொடுக்கும். சருமத்தை மிருதுவாக வைக்க உதவும். பொலிவாக வைத்திருக் கும். கற்றாழை மடலை இரண்டாக வெட்டி அதன் உள்ளே இருக்கும் நுங்கு போன்ற பகுதியுடன் மஞ்சள் தூளை குழைத்து பேஸ்ட் போல் ஆக்கி கொள்ளவும்.

கண்களைச் சுற்றியும், கருவளையம் சுற்றியும் மிதமாக பத்து நிமிடங்கள் மசாஜ் செய்த பிறகு 20 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவுங்கள். இரண்டே நாளில் க்ரீம் போடாமலேயே சருமத்தின் அழகு கூடுவதோடு கருவளையமும் மறைவதை உணர்வீர்கள்.
Image result for vijayakanth
அழகுச்சாறு
வெள்ளரிக்காய், எலுமிச்சை, கேரட், புதினா இவையெல்லாம் அழகுக்கு அழகு சேர்ப்பதிலும் ஆரோக்கியம் காப்பதிலும் முக்கியமானவையே. இவற்றைத் தனியாகவோ அல்லது சாறுகளை சேர்த்தோ பயன்படுத்தலாம்.

வெள்ளரிக்காய், கேரட் தலா- ஒரு துண்டு, எலுமிச்சை சாறு -ஒரு டீஸ்பூன், புதினா 10 இலைகள் அனைத்தையும் மிக்ஸியில் போட்டு நீர் விடாமல் அரைத்து சாறு பிழிந்து கண்களைச் சுற்றி கருவளையத்தின் மீது தடவி வரலாம். இவை காய காய சாறை தடவி வந்தால் உடனடி பலனைக் காணலாம்.

சாறாக இல்லாமல் பேஸ்ட்டையும் பயன்படுத்தலாம். இயற்கை முறையில் கருவளையம் போக்குவதே சிறந்தது என்பது தான் அழகு கலை நிபுணர்களின் அறிவுரையாகவும் இருக்கிறது.

மேக்கப்போடு இருக்க வேண்டாம்
வெளியில் செல்லும் போது எளிமையான மேக்கப் செய்தாலும் வீட்டுக்கு வந்ததும் முகத்தை நன்றாக கழுவுவது நல்லது. குறிப்பாக கண்களில் இருக்கும் மை, க்ரீம் வகையறாக்கள் போன்றவையும் முழுமையாக நீக்கி சுத்தம் செய்த பிறகே மேற்கண்ட குறிப்புகளைப் பயன்படுத்துவது நல்லது.

குறிப்பு
மேலே சொன்னவற்றை பயன்படுத்தும் கருவளைய கண்ணழகிகள் செல்ஃபோனில் நேரத்தை தொலைத்து தூக்கத் தைத் தவிர்த்து செய்தால் பலன் நிச்சயம் பூஜ்யம்தான். அதுமட்டுமல்ல கருவளையத்துக்கு உணவு முறையிலும் மாற்றம் தேவை. காலையில் க்ரீம் வகையறாக்கள் மாலையில் இயற்கை வகையறாக்கள் என்று பயன்படுத்துவதும் கருவளையத்தை அதிகரிக்கவே செய்யும் என்பதையும் மறவாதீர்கள்.

இரும்புச்சத்து நிறைந்த கீரைகள், பழங்கள், காய்கறிகள் போன்றவற்றையும் தவறாமல் எடுத்துகொள்ள வேண்டும். அப் போது தான் உணவும், பராமரிப்பும் இணைந்து அழகான முகத்தை மேலும் தேவதையாக்கி காட்டும்.இனி கருவளையம் என்ன கருமையான சருமத்தையும் விரட்டி அடிக்கலாம்.

Leave A Comment

Your email address will not be published. Required fields are marked *