ஜியோ அறிமுகம் செய்துள்ள புதிய பிளான்.. விலை வெறும் 699 ரூபாய் தான் ஆனால்.?

google home lights control க்கான பட முடிவு

ரிலையன்ஸ் நிறுவனம் பல்வேறு பல்வேறு சலுகைகளோடு தனது வாடிக்கையாளர்களை அசத்தி வரும் நிலையில் தற்போது தனது வாடிக்கையாளர்களுக்கு 4K செட் டாப் பாக்ஸ் வழங்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 ஜியோ டிவி

பிரீவியூ சேவையில் இருந்து கட்டண இணைப்பு சேவைக்கும் மாறும் தனது வாடிக்கையாளர்களுக்கு ஜியோ செட் டாப் பாக்ஸ்களை வழங்க துவங்கி இருப்பதாக கூறப்படுகிறது. ஆனாலும் இது இரண்டு மாதங்களுக்கு முன் ஜியோ டையல் பிளானுக்கு கீழ் வழங்கப்படுவதால் ஜியோ ஃபைபர் சோதனை நிறைவுற்றதாக ஜியோ தெரிவித்துள்ளது. இதனால் ஜியோ ஃபைபர் பிரீவியூ பயன்படுத்தும் பயனர்கள் அனைவரும் கட்டண சேவைக்கு மாற வேண்டும் என தெரிகிறது.

ரூ.699-எனும் துவக்க விலை

ரிலையன்ஸ் ஜியோவின் ட்ரிபில் பிளே சலுகைகள் ரூ.699-எனும் துவக்க விலையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது, இதுகுறித்து வெளியான தகவல்களில் அனைத்து ஜியோஃபைபர் பிராட்பேண்ட் சலுகைகளுடன் இலவச செட் டாப் பாக்ஸ் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

செட் டாப் பாக்ஸ் பயன்படுத்த வாடிக்கையாளர்கள் கேபிள் டிவி இணைப்பு வைத்திருக்க வேண்டும். தற்சமயம் வெளிவந்துள்ள தகவல்களில் வாடிக்கையாளர்கள் கேபிளஸ் டிவி இணைப்பின்றி 150 நேரலை டிவி சேனல்களை பார்க்க முடியும்.

jio set top box க்கான பட முடிவு

அதன்பின்பு ஜியோஃபைபர் செட் டாப் பாக்ஸ் உடன் ஜியோடிவி ஆப் பிரீ-இன்ஸ்டால் செய்யப்படாது. இதனால் ஜியோ ஃபைபர் செட் டாப் பாக்ஸ் கொண்டு ஜியோ டிவி செயலியில் உள்ள 650நேரலை டிவி சேனல்களை பார்க்க முடியாது.மேலும் செட் டாப் பாக்ஸ் உடன் ஜியோ டிவி பிளஸ் எனும் புதிய செயலி பிரீ இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ளது. இது ஒ.டி.டி தளங்களில் இருக்கும் தகவல்களை இணைக்கிறது.

jio set top box க்கான பட முடிவு

Leave A Comment

Your email address will not be published. Required fields are marked *