ஆண்ட்ராய்டிடம் தோற்ற ஆப்பிள்.. இந்த ஆண்ட்ராய்டு போன்தான் கோமராவில் பெஸ்ட்.!

huawei mate 30 pro க்கான பட முடிவு

ஸ்மார்ட் போன்களுக்கான பல்வேறு ஆய்வுகளில் முன்னணி தொலைபேசியான ஐபோனை வீழ்த்தி ஆண்ட்ராய்டு முதலிடத்தை பிடித்துள்ளது.

DXOMark எனப்படும் ஸ்மார்ட்போன் டிஜிட்டல் கேமரா மதிப்பாய்வு நிறுவனம் சார்பில், ஐபோன்களின் ஐ.ஓ.எஸ்., கொண்ட போன்களுக்கும், ஆண்ட்ராய்டு செயலியை கொண்ட போன்களுக்கும் இடையேயான மதிப்பிடுதலை நடத்தியது.

அதில், உலகின் சிறந்த கேமரா கொண்டதாக கருதப்படும் ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ் என்ற போன் 117 மதிப்பெண்களை பெற்றது. ஆனால், இதைவிட ஆண்ட்ராய்டு செயலியுடன் இயங்கும் ஹவாய் மேட் 30 ப்ரோ மற்றும் சியோமி மி எக்ஸ்.எக்ஸ்., 9 ப்ரோ பிரீமியம் மொபைல்கள் 121 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்தது.

கேமராவில் ஒரு காட்சியை பெரிதுப்படுத்தி பார்க்க ஜூம் செய்யும் திறனில் ஐபோனும், ஆண்ட்ராய்டும், 2 மடங்கு வரையிலான ஜூம் திறனில் சிறப்பாக இருப்பதாகவும், 5 மடங்கு ஆப்டிக்கல் ஜூம் திறனில் ஹவாய் போனை காட்டிலும் ஐபோன் பின்தங்கியிருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

huawei mate 30 pro க்கான பட முடிவு

வீடியோ ரெக்கார்டிங்கில் எச்.டி.ஆர் டைனமிக் வரம்பில், ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ் மற்றும் சியோமி மி சிசி9 போன்கள் ஆதிக்கம் செலுத்துகிறது. இவ்விரண்டும் 102 மதிப்பெண்களுடன் முதலிடத்தில் உள்ளன.

Leave A Comment

Your email address will not be published. Required fields are marked *