இடதுகை வீரர் என்ற ஒரே காரணத்துக்காக இவரை அணியில் வச்சிருக்காதீங்க!கொதிக்கும் ரசிகர்கள்!

Khaleel

இந்திய அணி தற்போது பங்களாதேஷ் அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் பங்களாதேஷ் அணியும், இரண்டாவது போட்டியில் நேற்று இந்திய அணியும் வெற்றி பெற்று தொடரில் 1-1 என்ற நிலையில் சமனில் உள்ளது. வரும் 10 ஆம் தேதி நடக்கும் மூன்றாம் டி20 போட்டியில் வெற்றி பெறும் அணி தொடரை கைப்பற்றும் என்பதால் அந்த போட்டிக்கான எதிர்பார்ப்பு இப்போதே அதிகரித்துள்ளது.

Khaleel

இந்நிலையில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான கலீல் அகமதுவை அணியில் இருந்து நீக்க கோரிக்கைகள் எழுந்துள்ளன. ஏனெனில் கலீல் அகமது முதல் போட்டியிலும் சரி இரண்டாவது போட்டியிலும் சரி ரன்களை அனாவசியமாக விட்டுக் கொடுக்கிறார். மேலும் நேற்றைய போட்டியில் 4 ஓவர்களை வீசி கலீல் அகமது 44 ரன்களை விட்டுக்கொடுத்து 1 விக்கெட்டை மட்டுமே வீழ்த்தினார்.இதுவரை 13 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள கலீல் ஓவருக்கு சராசரியாக 9 ரன்களை விட்டுக்கொடுத்து மோசமான சாதனையை வைத்துள்ளார். இவர் ஒரு இடது கை வேகப்பந்து வீச்சாளர் என்பதாலேயே அணியில் தொடர்ந்து இடம்பிடித்து வருகிறார் என்ற தகவலும் வெளியாகி உள்ளது. ஏனெனில் இந்திய அணியில் தற்போது இடது கை வேகப்பந்து வீச்சாளர் யாரும் இல்லை என்பதால் இவருக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

khaleel

ஆனால் ரசிகர்கள் இடது கை வேகப்பந்து வீச்சாளராக இருப்பதால் மட்டுமே அவருக்கு முன்னுரிமை தர வேண்டாம் வலது கை வேகப்பந்து வீச்சாளர்கள் நமது அணியில் தரமாகவே செயல்பட்டு வருகிறார்கள். எனவே திறமையை பாருங்கள் வலது கையா, இடது கையா என்பதை பார்ப்பதை நிறுத்துங்கள் என்றும் மேலும் உடனடியாக அணியில் இருந்து கலீல் அகமதுவை வெளியேற்றுங்கள் என்றும் தொடர்ந்து இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.

Leave A Comment

Your email address will not be published. Required fields are marked *