திருவள்ளுவருக்கு காவி பூசியது போல் எனக்கும்………….- ரஜினிகாந்தின் அதிரடி முடிவு

Related image

திருவள்ளுவரைப் போல எனக்கும் காவிச்சாயம் பூச முயற்சி நடக்கிறது. காவி சாயத்துக்கு திருவள்ளுவர் சிக்க மாட்டார். நானும் சிக்க மாட்டேன் என்று சென்னையில் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

நடிகர் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அவர்களின் தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தின் புதிய அலுவலகம் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள டிடிகே சாலையில் அமைக்கப்பட்டுள்ளது.

இக்கட்டிடத்தை திறப்பதற்காக நடிகர் ரஜினிகாந்த் நடிகர் கமல்ஹாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அதேபோல மறைந்த இயக்குநர் கே பாலச்சந்தர் அவர்களின் சிலையும் ராஜ்கமல் தயாரிப்பு நிறுவனத்தின் கட்டிட முன் பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது.
Image result for thiruvalluvar

இந்த சிலையையும் ரஜினிகாந்த் மற்றும் கமல் ஆகியோர் இணைந்து திறந்து வைத்தனர். நிகழ்ச்சியில் கமல் குறித்து, பாலச்சந்தர் குறித்தும் ரஜினிகாந்த் பேசினார்.

நிகழ்ச்சி முடிந்த பின்னர் தனது வீட்டின் முன் செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த் கூறுகையில்,

திருவள்ளுவர் ஒரு ஞானி, சித்தர். ஞானியையும் சித்தரையும் ஞானியையும் ஜாதி, மதத்திற்குள் அடைக்க முடியாது. அதற்கெல்லாம் அவர் அப்பாற்பட்டவர். திருவள்ளுவர் கடவுள் நம்பிக்கையுடன் இருந்தவர். அதை யாரும் மறைக்கவும் முடியாது மறுக்கவும் முடியாது.
Image result for rajinikanth

பாஜக அவர்களது அலுவலத்திலும் ட்விட்டரிலும் அவர்கள் காவி நிறம் வடிவில் வைத்திருந்தது அவர்களது தனிப்பட்ட விவகாரம். அதையே தமிழகம் முழுவதும் பின்பற்ற வேண்டும் என நினைக்கக் கூடாது. இதை விட மிகப்பெரிய பிரச்னை நாட்டில் உள்ளது அதை விடுத்து இதை ஒரு சர்ச்சையாக்கி விவாதிப்பது வேடிக்கையாக உள்ளது.

நாட்டில் மிகப்பெரிய பிரச்னை இருக்கிறது. அது குறித்து பேசாமல் திருவள்ளுவர் விவகாரம் குறித்து பேசுவது வேடிக்கையாக உள்ளது.
Image result for rajinikanth
வாழ்நாள் சாதனையாளர் விருது அளித்தவர்களுக்கு நன்றி. மகிழ்ச்சி. குழந்தைகளுக்கான தொண்டு நிறுவனத்தை தொடங்க லதா ரஜினிகாந்த் முதலமைச்சர் சந்திக்க சென்றுள்ளார்.

உள்ளாட்சி தேர்தலில் நாங்கள் போட்டியிட வாய்ப்பில்லை.பொன்.ராதாகிருஷ்ணன் என்னை அவர் கட்சியில் சேர அணுகவில்லை. எனக்கு பாஜகவின் வண்ணம் பூச நினைக்கின்றனர். திருவள்ளுவருக்கு வண்ணம் பூசுவது போல எனக்கும் காவி வண்ணம் பூச பார்க்கிறார்கள். திருவள்ளுவரும் மாட்ட மாட்டர் நானும் மாட்ட மேட்டேன்.

என்னை பாஜகவை சேர்ந்தவன் என்றும் அதன் தலைவராக வருவார் என்றும் நிறுவ முயற்சி நடக்கிறது என்றும் அவர் கூறினார்.

Leave A Comment

Your email address will not be published. Required fields are marked *