பிரதமர் மோடியின் புதிய கார்.. பிரத்யேக வசதியோடு கூடிய இது எத்தனை கோடி தெரியுமா.?

நரேந்திர மோதி க்கான பட முடிவு

பிரதமர் நரேந்திர மோடி தற்போது செல்வாக்கு மிக்க உலக தலைவர்களில் ஒருவராக மாறியுள்ளார். எனவே அவருக்கு உச்சகட்ட பாதுகாப்பு வழங்கப்படுகிறது.

பிதமர் மோடி இந்தியாவின் பிரதமராக உருவெடுத்தபோது, பதவியேற்பு விழாவிற்கு வர கவச மஹிந்திரா ஸ்கார்பியோ காரை பயன்படுத்தினார். குஜராத் முதல்வராக இருந்த சமயத்திலும், தேர்தல் பிரசாங்களிலும் இதே காரைதான் மோடி உபயோகித்தார். இதன்பின் பிரதமராக பதவியேற்ற பிறகு, பிஎம்டபிள்யூ 7-சீரிஸ் ஹை-செக்யூரிட்டி காரை நரேந்திர மோடி பயன்படுத்த தொடங்கினார்.

பிரதமர் மோடி பயன்படுத்தும் புதிய காரின் விலை இதுதான்... விலையை மட்டும் யாருகிட்டயும் சொல்லீராதீங்க

இந்த காரை தொடர்ந்து லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் சென்டினல் காரையும் பிரதமர் மோடி பயன்படுத்த தொடங்கினார். பின்னர் பழைய தலைமுறை டொயோட்டா லேண்ட் க்ரூஸர் காரையும் மோடி பயன்படுத்தினார்.

இந்த சூழலில் புதிய கார் ஒன்றை பிரதமர் மோடி பயன்படுத்த தொடங்கியிருக்கும் தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

லேட்டஸ்ட் ஜெனரேஷன் டொயோட்டா லேண்ட் க்ரூஸர் காருடன் பிரதமர் மோடி தற்போது வலம் வரத்தொடங்கியுள்ளார். அவர் சமீபத்தில் தாய்லாந்து சுற்றுப்பயணம் சென்று விட்டு இந்தியா திரும்பினார். அவரது வருகையை சில செய்தி தொலைக்காட்சிகள் ஒளிபரப்பின. இதில், லேட்டஸ்ட் ஜெனரேஷன் டொயோட்டா லேண்ட் க்ரூஸர் காரில் மோடி ஏறுவதை நம்மால் பார்க்க முடிந்தது.

பிரதமர் மோடி பயன்படுத்தும் புதிய காரின் விலை இதுதான்... விலையை மட்டும் யாருகிட்டயும் சொல்லீராதீங்க

இந்த காரின் எக்ஸ் ஷோரூம் விலை 1.70 கோடி ரூபாய். இதன் ஆன் ரோடு விலை சுமார் 2 கோடி ரூபாய்க்கு நெருக்கமாக வரும்.

இந்தியாவின் மிக முக்கியமான நபர் ஒருவரை சுமந்து செல்லும் கார் என்பதால், பாதுகாப்பு வசதிகள் அதிகம் நிறைந்த கவச காராக இது மாற்றப்பட்டுள்ளது. மெர்சிடிஸ் பென்ஸ், லேண்ட் ரோவர் மற்றும் பிஎம்டபிள்யூ போல் டொயோட்டா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக கவச வாகனங்களை வழங்குவதில்லை.

இந்த காரில், 4.5 லிட்டர் வி8 டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி பயன்படுத்தும் புதிய காரின் விலை இதுதான்... விலையை மட்டும் யாருகிட்டயும் சொல்லீராதீங்க

Leave A Comment

Your email address will not be published. Required fields are marked *