நிதி நெருக்கடியில் மாநிலம்..,வீடியோ கேம் விளையாட்டில் ஜெகன் மோகன்.!

Image result for ஜெகன்மோகன்"

ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி, தனது வீட்டின் வசதியை பெருக்கிக் கொள்வதற்காக அரசு நிதியிலிருந்து 15 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளதாக சந்திரபாபு நாயுடு குற்றஞ்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் பதிவிட்டுள்ள ட்வீட்டில், குண்டூர் மாவட்டத்தில் உள்ள ஜெகன்மோகன் ரெட்டி வீட்டுக்கு சாலை அமைத்தல், மின்சாரப் பணிகள், ஹெலிபேட், கதவு, ஜன்னல்கள் பொருத்துதல்,

பொதுமக்களை சந்திப்பதற்காக பெரிய கூடம் அமைத்தல் உள்ளிட்டவற்றிற்காக அரசு நிதியில் இருந்து 15 கோடியே 65 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

மாநிலம் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளபோது ஆந்திரா முதலமைச்சர் ஜெகன் மோகன்ரெட்டி தனது அரண்மனையில் வீடியோ கேம் விளையாடி கொண்டிருப்பதாகவும் தனது ட்வீட்டில் சந்திரபாபு நாயுடு குற்றஞ்சாட்டியுள்ளார்.

Leave A Comment

Your email address will not be published. Required fields are marked *