சட்ட சிக்கல் ஆகிறும்.. தோனிக்கு செக்: பெருமூச்சு விட்ட ரசிகர்கள்!

Image result for dhoni

இந்தியா – வங்கதேசம் இடையேயான டெஸ்ட் போட்டிகளில் கலந்துரையாட கௌரவ வர்ணனையாளராக தோனி செயல்படமாட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

Image result for dhoni

இந்தியா – வங்கதேசம் இடையேயான டெஸ்ட் போட்டிகள் எதிர்வரும் 22 ஆம் தேதி துவங்க உள்ளது. ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்திருக்கும் இந்த தொடரை ஒளிபரப்ப ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் ஒப்புதல் வாங்கியுள்ளது. முதன்முறையாக இந்தியாவில் நடைபெறும் பகல் – இரவு ஆட்டம் இது என்பதால் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Image result for இந்தியா - வங்கதேசம் டெஸ்ட் போட்டி

இந்நிலையில் முன்னாள் டெஸ்ட் தொடர் கேப்டன்களை அழைத்து வர்ணனையாளர்கள் அறையில் சிறப்பு வர்ணனை நிகழ்ச்சியை நடத்த ஸ்டார் ஸ்போர்ட்ஸ் முடிவு செய்துள்ளது. இதற்கான அனுமதி கேட்டி பிசிசிஐ தலைவர் கங்குலிக்கு கடிதம் அனுப்பியுள்ளது.

Image result for மகேந்திர சிங்

மேலும் முன்னாள் இந்திய அணி கேப்டன் மகேந்திரசிங் தோனியையும் சிறப்பு வர்ணனையாளராக அழைத்திருந்தனர். தோனி மீண்டும் விளையாட வருவார் என ரசிகர்கள் எதிர்பார்த்து இருக்கும் நிலையில் அவர் வர்ணனையாளராக மாறுவது ரசிகர்களுக்கு அதிருப்தியை தந்தது.

Related image

ஆனால், தோனி வர்ணனையாளராக செயல்படமாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது. தோனி இன்னும் ஓய்வுபெறவில்லை, இந்திய கிரிக்கெட் வாரியத்தின் ஒப்பந்த வீரராகதான் இருக்கிறார். எனவே, வர்ணனையாளராக செயல்பட்டால் இரட்டை ஆதாய குற்றச்சாட்டு எழும் என்பதால் வர்ணனையாளராக தோனி செயல்படமாட்டார் என தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

Leave A Comment

Your email address will not be published. Required fields are marked *