நல்லெணெய் தேய்த்து குளிப்பதால் இவ்வளவு நன்மைகளா??

Image result for oil bath india

அந்தகாலத்துல நம் முன்னோர்கள் வாரத்திற்கு இரண்டு முறையாவது நல்லெண்ணெய் குளியல் அவசியம் என சொன்னார்கள் முடியவில்லை என்றால் ஒருமுறையாவது எண்ணெய் குளியல் மிகவும் அவசியம் புதன்,சனி ஆகிய நாட்களில் ஆண்களும்,செவ்வாய்,வெள்ளி ஆகிய நாட்களில் பெண்களும் கட்டாயம் தேய்த்து குளிக்க வேண்டும் ஆனால் இப்போதைய காலகட்டத்தில் அதை மறந்துவிட்டனர் தீபாவளி வந்தால் மட்டும்தான் எண்ணெய் தேய்த்து குளிக்க அனைவருக்கும் நினைவு வரும்.

image

1.நல்லெண்ணெய் தேய்த்து தொடர்ந்து குளித்துவர சளி,ஜலதோஷம் வராமல் தடுக்கும்.

2.எண்ணெய்யை உடல் முழுவதும் தடவுவதால் மேலே உள்ள தோள்கள் குளிர்ச்சியடைகிறது.உடலில் உள்ள வெட்பம் வெளியாகும்.

3.எண்ணெய் குளியலை தொடர்ந்து செய்துவந்தால் மனஅமைதியும்,நல்ல தூக்கம் வர பெரிதும் உதவியாக இருக்கின்றது இந்த நல்லெண்ணெய்.

4.வாரம் இருமுறை அல்லது ஒருமுறை எண்ணெய் தேய்த்து குளிதுவந்தால் சருமம் பொலிவாக இருக்கும்.

image

5.உடல் உறுப்புகளில் முக்கியமான ஒன்று சருமம் அதாவது தோல் சோப்பு பயன்படுத்துவதன் மூலன் வெளியே உள்ள கிருமிகள் போகுமே தவிர உள்ளே உள்ள கிருமிகள் போகாது அதற்குத்தான் எண்ணெய் குளியல் அவசியம்.

6.நல்ல சுத்தமான நல்லெண்ணெய் பயன்படுத்தி வருபவர்களுக்கு எலும்பு பலம் பெரும்.

7.எண்ணெய் குளியலால் உடலில் உள்ள உஷ்ணம் வெளியாகும்,உஷ்ணம் அதிகமானால் சோர்வு,எரிச்சல்,தலைவலி,உணர்ச்சிவசபடுதல் போன்றவை உண்டாகும்.

8.எண்ணெய் குளியல் முறையாக செய்யாவிட்டால் உடல் உஷ்ணம் அதிகமாகி உடலில் உள்ள உறுப்புகள் பாதிக்கும்.

9.சருமத்தில் எப்போதும் அதிகமா எண்ணெய்பசை அதிகமா இருபதற்கு எண்ணெய் குளியல் அவசியம் எண்ணெய்பசை இல்லாமல் சருமம் வறண்டு போனால் பல தோல் வியாதிகள் வரும்.

image

10.வேர்க்குரு,படை,சொறி,சிரங்கு இவைகள் கிட்ட வராமல் தடுக்கிறது.

11.எண்ணெய் குளியல் வாரம் இரண்டு முறை குளித்து வர தலையில் முடி கொட்டது,பேன் தொல்லை வராது மற்றும் இளநரை வருவதை கூட தடுக்கலாம்.

12.கண்களை எப்போதும் குளிர்ச்சியாக வைத்திருக்க பெரிதும் உதவியாக இருக்கும் இந்த எண்ணெய் குளியல்.

13.உடலின் வெட்பத்தை சமநிலையில் வைத்து கொள்வது மிகவும் நல்லது.

இந்த எண்ணெய் குளியல் சிலர் மருத்துவரின் ஆலோசனைப்படி பயன்படுத்துவது நல்லது நோய்வாய்பட்டவர்கள்,புற்றுநோய் உள்ளவர்கள்,விபத்தில் உள்காயம் உள்ளவர்கள் மற்றும் மாதவிடாய் பிரச்சனைகள் உள்ளவர்கள்.

இது ஒரு எண்ணெய் மட்டும் என இருந்தால் விட்டு விடலாம் அதாவது தேங்காய் எண்ணெய் மற்றும் விளக்கெண்ணை இது மாதிரி எண்ணெய்கள் நாம் பயன்படுத்துவது மிகவும் குறைவு,நாம் அதிகமாக எண்ணெய் பயன்படுத்துவது சமையலுக்கு மட்டும் தான் அதனால்தான் இந்த கருத்துகளை உங்களிடம் பகிர்ந்துக்கொண்டேன்.

Leave A Comment

Your email address will not be published. Required fields are marked *