அயோத்தி வழக்கில் வரும் தீர்ப்பை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும்- மத தலைவர்கள் வேண்டுகோள்

Image result for ayodhya case

அயோத்தி வழக்கில் இன்னும் சில நாட்களில் தீர்ப்பு வெளியாக இருக்கும் சூழலில் இந்து, முஸ்லிம் அமைப்பினரும் சமூக செயல்பாட்டாளர்களும் ஒரே இடத்தில் சந்தித்துப் பேசியுள்ளனர்.

அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றம் தொடர்ந்து நாற்பது நாட்களாக நடத்திய விசாரணை அண்மையில் முடிந்தது. இதனையடுத்து தீர்ப்பு எப்போது வெளியாகும் என எதிர்பார்ப்பு ஏற்பட்டது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் வரும் 18ஆம் தேதி ஓய்வு பெறுகிறார். இதனால் ஓய்வுக்கு முன் அவர் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அயோத்தி வழக்கில் தீர்ப்பு வழங்குவார் எனக் கருதப்படுகிறது.

இச்சூழலில் பாஜக, ஆர்எஸ்எஸ் ஆகியவை இணைந்து டெல்லியில் மத நல்லிணக்கக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தன. இதில் முஸ்லிம் அமைப்புகளின் தலைவர்களும் சமூக செயல்பாட்டாளர்களும் கலந்து கொண்டனர்.

Image result for ayodhya case
இக்கூட்டத்தில் ஆர்எஸ்எஸ் சார்பில் கிருஷ்ணா கோபால் மற்றும் ராம் லால் ஆகியோர் கலந்துகொண்டனர். பாஜக சார்பில் சிறுபான்மை விவகாரத்துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் ஷா நவாஸ் உசேன் ஆகியோர் இடம்பெற்றனர்.

“இந்தியா வேற்றுமையிலும் ஒற்றுமை என்ற கலாச்சாரத்தைக் கொண்ட நாடு. தீர்ப்பு எப்படி இருந்தாலும் நாட்டின் நலனே முதன்மையானது என்பதை நினைவில் கொள்வோம்.” என ஆர்எஸ்எஸ் தரப்பில் கூறப்பட்டது.

“அயோத்தி தீர்ப்பை பிற வழக்குகளுக்கு முன்னுதாரணமாக அமையும் என்றும் இந்தத் தீர்ப்பை மேற்கோள் காட்டி பிற மசூதிகளும் கோயில்களும் சர்ச்சைக்குள்ளாவை அனுமதிக்கக் கூடாது” என அகில இந்திய முஸ்லீம் தனி நபர் சட்ட வாரியம் சார்பில் கலந்துகொண்ட கமல் ஃபாரூக்கி தெரிவித்தார்.
RSS, BJP Reach Out To Muslims Ahead Of Ayodhya Verdict. What They Agreed
ஷியா, தியோபந்தி, பரேல்வி, ஜமியாத் உலேமா இ ஹிந்த் உள்ளிட்ட முஸ்லிம் அமைப்புகளின் பிரதிநிதிகள், அஜ்மீர் ஷெரீப் மற்றும் நிஜமுதின் ஆலியா தர்காக்களின் பிரதிநிதிகள், வக்பு வாரிய உறுப்பினர்கள் ஆகியோரும் கலந்துகொண்டார்கள்.

“பொது நன்மைக்கான பிரச்சினைகளில் ஒருங்கிணைந்து செயல்படும் வேண்டும். இத்தகு உரையாடல் தொடர வேண்டும் என்ற எண்ணம் வலுவாகியுள்ளது.” என அமைச்சர் முகமது அபாஸ் நக்வி தெரிவித்தார்.

சமூக ஒற்றுமை மற்றும் மத நல்லிணக்கத்துக்கு ஊறு விளைவிக்கும் சதித் திட்டங்கள் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என கூட்டத்தில் கலந்துகொண்ட அனைவரும் கூட்டாக நாட்டு மக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave A Comment

Your email address will not be published. Required fields are marked *