இந்தியாவின் காற்று மாசுக்கு காரணம் பாகிஸ்தான் தான் !!- பாஜக தலைவர் குற்றச்சாட்டு

Image result for vineet agarwal

பாகிஸ்தான், சீனா நாடுகளாளேயே டெல்லியில் காற்று மாசு நிலவுகிறது என உத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த பாஜக தலைவர் கூறிய வினோத காரணம் நகைப்பை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் விவசாயிகள் அறுவடைக் காலம் முடிந்து விவசாயக் கழிவுகளை எரித்து வருகின்றனர். இதனால், அண்டை மாநிலங்களில் காற்று மாசு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தலைநகர் டெல்லியில் அளவுக்கு அதிகமான காற்று மாசுபாடு ஏற்பட்டுள்ளது. இயல்பு நிலையான 2.5 மாசுத்துகளை தாண்டி 800 புள்ளிகள் வரை சென்றுள்ளதால் நிலைமை மோசமாகியுள்ளது.

Image result for pakistan india
இதன் காரணமாக பொதுமக்கள் சுவாசப் பிரச்சினை, கண் எரிச்சல் உள்ளிட்டவற்றால் அவதிப்பட்டு வருகின்றனர். காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த டெல்லி அரசு பல்வேறு முயற்சிகள் எடுத்து வருகிறது. காற்று மாசு காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பாகிஸ்தான், சீனா நாடுகள் சேர்ந்து விஷ வாயுக்களை இந்தியாவுக்கு அனுப்பி வருகிறது. இதனால் தான் டெல்லியில் கடுமையான காற்று மாசு நிலவுகிறது என உத்தரப்பிரதேச மாநிலத்தை சேந்த பாஜக தலைவர் வினீத் அகர்வால் சர்தா வினோதமான காரணத்தை தெரிவித்துள்ளார்.
Image result for vineet agarwal
பாகிஸ்தான், சீனா நாடுகள் நம்மை பார்த்து பயப்படுகிறது என தான் நினைப்பதாக தெரிவித்த வினீத் அகர்வால், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் பொறுப்பேற்றதிலிருந்தும், இந்தியாவுக்கு எதிரான அனைத்து வகையான தந்திரங்களை கையாண்ட போதும் பாகிஸ்தானால் ஒரு வெற்றியை கூட பதிவு செய்ய முடியாததால் அந்நாடு விரக்தியடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் பேசிய வினீத் அகர்வால், டெல்லியில் மாசுக் காற்று ஏற்படுவதற்கு விவசாய கழிவுகள் எரிப்பு மற்றும் தொழிற்சாலைகள்தான் காரணம் என்று டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் உள்பட பலர் கூறுகின்றனர். விவசாயிகள் நமது நாட்டின் முதுகெழும்பு. விவசயிகளையும், தொழிற்சாலைகளையும் குறை கூறக்கூடாது எனவும் தெரிவித்துள்ளார்.
Image result for pakistan india

புராண காதாப்பாத்திரங்களான கிருஷ்ணர் மற்றும் அர்ஜுனனுடன் பிரதமர் மோடியையும், அமித்ஷாவையும் ஒப்பிட்டு பேசிய வினீத் அகர்வால், பிரதமர் மோடி கிருஷ்ணர் போன்றவர், அமித்ஷா அர்ஜுனன் போன்றவர். இவர்கள் இணைந்து அனைத்து பிரச்னைகளையும் பார்த்து கொள்வர் என்றும் தெரிவித்துள்ளார்.

டெல்லி காற்று மாசுவுக்கு பாகிஸ்தான், சீனா நாடுகள் அனுப்பும் விஷ வாயு தான் காரணம் என பாஜக தலைவர் வினீத் அகர்வால் கூறிய வினோத காரணம் நகைப்பை ஏற்படுத்தியதுடன், நெடிசன்களின் கலாய்க்கு விருந்தாகவும் அமைந்துள்ளது. ”பாகிஸ்தானை விடுங்க அது எதிரி நாடு, ஆனா கூப்புட்டு வந்து விருந்து வெச்ச சீனாவும் இப்படி முதுகுல குத்திடுச்சே” எனவும், ”உலகில் இருக்கும் அறிவுஜீவிகள் எல்லாம் நம்ம ஊர்ல தான் இருக்காங்க” எனவும் நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

Leave A Comment

Your email address will not be published. Required fields are marked *