வியட்நாமுடன் மோதும் இந்தியப் பெண்கள் கால்பந்து அணி, எழுந்து வரும் அக்கினி சிறகுகள் !!

Image result for indian woman football team

இந்தியப் பெண்கள் கால்பந்து அணியினர் நாளை வியட்நாம் அணியுடன் இரண்டாம் முறையாக மோத உள்ளனர்.

இந்தியப் பெண்கள் கால்பந்து அணி, FIFA சர்வதேச நட்புறவு போட்டியை விளையாடி வருகிறது. வியட்நாமில் நடைபெறும் இரண்டு போட்டிகளில் வியட்நாம் அணியையே எதிர்த்து விளையாடுகிறது இந்திய அணி. கடுமையான பயிற்சிக்குப் பின் சர்வதேச அணியை இந்தியப் பெண்கள் அணி சந்திக்கிறது.

Image result for indian woman football team
சர்வதேச தரவரிசைப் பட்டியலில் 34-ம் இடத்தில் உள்ள வியட்நாம் அணியை 58-வது இடத்தில் உள்ள இந்திய அணி எதிர்த்து மோதுகிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை வியட்நாமுக்கு எதிரான முதல் போட்டியில் 3-0 என்ற கோல் கணக்கில் இந்திய அணி படுதோல்வி அடைந்தது.

ஆனால், தோல்வியிலிருந்து பாடம் கற்றுக்கொண்டுள்ளதாகக் கூறும் இந்திய அணி மீண்டும் நாளைய இரண்டாம் போட்டியில் வெற்றிபெறும் என அணியின் பயிற்சியாளர் மேமோல் ராக்கி தெரிவித்துள்ளார்.

Leave A Comment

Your email address will not be published. Required fields are marked *