தோனி கொடுக்க உள்ள சர்பிரைஸ்.. கோடிகனக்கான ரசிகர்களுக்கு இம்மாதம் செம்ம ட்ரீட்.!

தல தோனி க்கான பட முடிவு

இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோதும் பகலிரவு டெஸ்ட் போட்டி வரும் நவம்பர் 22 ஆம் தேதி தொடங்கி நடைபெற உள்ளது.

இந்தியாவின் முதல் பகலிரவு டெஸ்ட் போட்டியான இதில் தோனி சிறப்பு வர்ணனையாளராக கலந்துகொள்ள வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

dhoni may participate as guest comentator in indias first day night test cricket

ஐ.ஏ.என்.எஸ் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலில், இந்த டெஸ்ட் போட்டியின் முதல் இரண்டு நாட்களும் இந்திய அணியின் அனைத்து முன்னாள் கேப்டன்களும், இந்தியாவின் டெஸ்ட் வரலாற்றில் இருந்து தங்களுக்குப் பிடித்த தருணங்களைப் பகிர்ந்து கொள்ளும் வகையில் சிறப்பு வர்ணனையாளகளாக கலந்துகொள்வார்கள் என்று தெரிவக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தோனியிடமும் பேசப்பட்டபோது, அவர் ஒப்புக்கொண்டதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை தோனி இதில் கலந்துகொண்டால், இதுவே அவரது சர்வதேச போட்டிக்கான முதல் வர்ணனையாக இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

தொடர்புடைய படம்

Leave A Comment

Your email address will not be published. Required fields are marked *